ஈரான் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடுக்கும் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் முயற்சியாக, இஸ்ரேலுக்குச் சொந்தமான அல்லது இஸ்ரேல் நாட்டின் நிறுவனம் இயக்கப்படும் கப்பல்களைக் குறிவைத்துச் செங்கடலில் தாக்குதல் நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும்.
செங்கடலில் நடக்கும் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா படைகள் ஈரான் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள், பல நாடுகளின் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதால் உலகளவில் கப்பல் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் படைகளுக்கு மத்தியிலான தாக்குதல் மூலம் பல கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் மாற்றுப் பாதையைத் தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் பொருட்கள் வருவதில் தாமதத்தில் துவங்கி உற்பத்தி தொய்வு, கூடுதல் செலவு எனப் பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் செங்கடலில் நடக்கும் பிரச்சனை காரணமாக கர்நாடகாவில் சில தொழில் துறைகளும், வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருக்கும் வர்த்தகங்கள், உற்பத்தி கூட்டணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவில் இருந்து வாங்கப்படும் எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான முக்கிய மூலப்பொருட்கள் மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து வாங்கப்பட்ட எஃகு ஆகியவை செங்கடல் வழியாக அனுப்பப்பட்டு வந்தது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் காரணமாக இந்த மூலப்பொருட்களை நம்பியிருக்கும் கர்நாடக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதோடு முக்கியமான தென்னிந்தியாவில் இருந்து பழங்களின் கூழ் ஏற்றுமதி செய்யப் போதுமான கண்டெய்னர்கள் கிடைக்காததால் இத்துறை வர்த்தகமும் முடங்கியுள்ளது.
இத்தாலி நாட்டில் இருந்து வர வேண்டிய soft iron, ferro alloys பாதிக்கப்பட்டு உள்ளது, இதேபோல் இந்த இடைப்பட்ட காலத்தில் தைவான், சீனாவில் இருந்து ஸ்டீல் வாங்கப்பட்டு உள்ளது. பல கர்நாடக நிறுவனங்கள் விமானத்தின் மூலம் பல பொருட்களை இறக்குமதி செய்யத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டுக்கான பெரும் பகுதி இறக்குமதி வழித்தடங்கள் தென்கிழக்கு நாடுகள் பக்கம் இருக்கும் காரணத்தால் செங்கடலில் பிரச்சனை தமிழ்நாட்டின் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை, ஆனால் விலை அடிப்படையில் கட்டாயம் கணிசமான பாதிப்பு உள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications