தைவான் நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனமான Foxconn புதிதாக இரண்டு உற்பத்தி தொழிற்சாலை அமைக்க கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது மட்டும் அல்லாமல் விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு புதிய தொழிற்சாலை அமைப்பதற்காக கர்நாடகாவில் சுமார் 600 மில்லியன் டாலர் அதாவது 4800 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்யவுள்ளதாகவும் இதற்கான Letter of Intent-ல் கையெழுத்திட்டு உள்ளது. இதில் முக்கியமாக ஒரு தொழிற்சாலையை பாக்ஸ்கான் அமெரிக்காவை தளமாகக் கொண்ட உற்பத்தி நிறுவனமான அப்ளைடு மெட்டீரியல்ஸ் உடன் இணைந்து செயல்படுத்த உள்ளது.

பாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உட்பட பல முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு தேவையான கேசிங் உதிரிபாகங்களைத் தயாரிப்பதற்கான தளத்தை அமைக்க சுமார் 350 மில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்த கேசிங் (CASING) தொழிற்சாலையில் 12,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்ஸ்கான் நிறுவனம் அமைக்க உள்ள இரண்டாவது ஆலையை ஏற்கனவே கூறியது போல் அமெரிக்காவை தளமாகக் கொண்ட செமிகண்டக்டர் உபகரண தயாரிப்பு நிறுவனமான அப்ளைடு மெட்டீரியல்ஸ் உடன் இணைந்து சுமார் 250 மில்லியன் முதலீட்டில் சிப் தயாரிக்கும் கருவிகளை தயாரிக்க உள்ளது.
இந்த திட்டத்திற்கான இடமும் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பெங்களூரு ஊரக பகுதிகளில் ஹரலூர் முத்தேனஹள்ளி உள்ள ஹைடெக் ஏரோஸ்பேஸ் மற்றும் டிஃபென்ஸ் பார்க் ஃபேஸ் II பகுதியில் உறுதி செய்யப்பட உள்ளது. இப்பகுதியில் பாக்ஸ்கான் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 1600 கோடி ரூபாய் மதிப்பிலான விரிவாக்க திட்டத்தை அறிவித்த அதே நாளில் அதாவது ஜூலை 31 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் மாலை கர்நாடக மாநிலத்தின் பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் எம்.பி பாட்டீல், ஐடி/பிடி அமைச்சர் பிரியங்கா கார்கே மற்றும் ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியு ஆகியோர் முக்கியமான ஆலோசனை நடத்தினர்.
இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து தற்போது இரு புதிய தொழிற்சாலை அமைப்பதற்காக கர்நாடகாவில் சுமார் 4800 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்யவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த முதலீட்டையும் Hon Hai நிறுவனம் செய்ய உள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
பாக்ஸ்கான் ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மற்றும் தும்கூர் ஆகிய பகுதிகளில் அதிகப்படியான முதலீட்டில் மாபெரும் தொழிற்சாலையை கட்டமைக்கும் பணிகளை துவங்கியுள்ளது. இதில் குறிப்பாக தும்கூரில் ஐபோன்-க்கான உதிரிபாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.
பாக்ஸ்தான் தமிழ்நாட்டில் வைத்திருப்பது ஆப்பிள் ஐபோன்களுக்கான அசெம்பி ஆலையை. கர்நாடகாவில் அமைக்கப்பட்ட உள்ளது உதிரிபாகங்களுக்கான தொழிற்சாலைகள்.
கர்நாடக அரசு இன்று காலையில் பேட்டரி தொழிற்சாலையை அமைக்கும் 8000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இன்டர்நேஷ்னல் பேட்டரி கம்பெனி-யிடம் (IBC) இருந்து பெற ஒப்பந்தம் கையெழுத்திட்டது. மாலையில் பாக்ஸ்கான் சார்பாக Hon Hai Technology group 4800 கோடி ரூபாய் முதலீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications