கர்நாடக மாநிலத்தில் அதிகரித்து வரும் வெப்ப அலையின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, அம்மாநிலத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் அரசு ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசு அடுத்தடுத்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது, புதிய வரி துவங்கி, தண்ணீர் பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் முதல் பைக் டாக்சி சேவை நிறுத்தம் வரையில் அடுத்தடுத்து பல அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அரசு ஏப்ரல் 2-ஆம் தேதி புதன்கிழமை அன்று வெளியிடப்பட்ட உத்தரவின்படி, வெப்ப அலையின் தாக்கத்தால பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் காலை 8:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை செயல்படும்.

இந்த பணி நேர மாற்றம் முக்கியமாக காலாபுரகி பகுதியில் இருக்கும் ஏழு மாவட்டங்கள் மற்றும் பெலகாவி பகுதியில் இருக்கும் விஜயபுரா மற்றும் பாகல்கோட் மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பெங்களூருவில் இருக்கும் கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கர்நாடக அரசிடம் கொடுத்த முறையான கோரிக்கையின் அடிப்படையிலேயே அலுவலக நேரத்தை மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூர் வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் குளு குளுவென இருந்தாலும் கோடை காலத்தில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதேபோல கர்நாடக மாநிலத்தில் ஒவ்வொரு பகுதியிலும் தட்பவெப்ப நிலை அதிகளவில் மாறுகிறது. வருடம் முழுவதும் வெப்பமாக இருக்கும் பல பகுதிகள் உள்ளது. உலகளவில் தட்பவெப்ப நிலை மாறிவரும் வேளையில் இந்தியாவிலும் அதிகளவில் மாற்றம் கண்டு வருகிறது.
இந்த நிலையில் அதிகரித்து வரும் வெப்பநிலையில் அரசு ஊழியர்கள் தங்கள் பணிகளைச் செய்வதில் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு Kalaburagi மற்றும் Belagavi பகுதியில் இருக்கும் சில முக்கிய மாவட்டங்களுக்கு மட்டும் இப்புதிய பணிநேர மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கர்நாடக அரசு இக்கோரிக்கை விரிவாக ஆய்வு செய்த பிறகு, பணி நேரத்தை மாற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்தது செயல்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் எதிர்பார்க்கப்படும் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் தற்போதுள்ள பணி நேரத்திற்குப் பதிலாகக் காலை 8:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை செயல்படும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் திருத்தப்பட்ட நேரங்களில் பணியாற்றி மக்களுக்குத் தடையற்ற சேவை வழங்கப்படுவதை உறுதி செய்து, பொதுமக்களுக்கு எவ்விதமான அசௌகரியத்தையும் கொடுக்கக் கூடாது எனத் தனது உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் மாவட்ட ஆட்சியர்கள் அல்லது ஜில்லா பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகள் அவசரப் பணிக்கான அழைத்தால், ஊழியர்கள் மாற்றியமைக்கப்பட்ட பணி நேரத்தைப் பொருட்படுத்தாமல் பணியாற்ற வேண்டும் என்றும் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications