ரூ.10,144 கோடி முதலீடு.. முதலமைச்சர் வெளியிட்ட அடடே அறிவிப்பு.. 6000 பேருக்கு வேலை கன்ஃபார்ம்..!!

பெங்களூரு: பொதுவாக ஒரு மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அந்த மாநிலத்தில் எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அது அந்த மாநிலத்தின் தொழில்துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றும். பெருளாதாரமும் மேலும் வலுப்பெறும். அத்துடன் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும். அந்த வகையில், பெங்களூரு நகரம் எப்போது ஒரு தனித்துவமானது. பல லட்சம் பேர் இந்தியாவில் உள்ள வெளிமாநிலங்களில் இருந்து சென்று அங்குள்ள உலகத்தரம் வாய்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இன்றளவும் வேலைசென்று வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது மேலும் பல இளைஞர்களுக்கு நற்செய்தி அளிக்கும் விதமாக கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாநிலத்தின் தொழில்துறையை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் புதிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

ரூ.10,144 கோடி முதலீடு.. முதலமைச்சர் வெளியிட்ட அடடே அறிவிப்பு.. 6000 பேருக்கு வேலை கன்ஃபார்ம்..!!

பெங்களூரில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற 64வது கூட்டத்தில், புதிய முதலீடு மற்றும் கூடுதல் முதலீடு தொடர்பான உயர்மட்ட குழு முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, இவற்றில் ஒன்பது திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. சித்தராமையா தலைமையிலான மாநில உயர்மட்ட அனுமதிக் குழு, மாநில அமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் ஒரு பகுதியாக, அரசு ரூ.10,144.31 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டங்கள் மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 6,000 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொழில்துறை கண்டுபிடிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான மையமாக கர்நாடகாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துகாட்டுகிறது.

இந்த முக்கிய திட்டங்களில், மைசூர் மாவட்டம், கோச்சனஹள்ளியில் மின்னணு உற்பத்தி கிளஸ்டருக்கு, குறைக்கடத்தி துறையில் ரூ.3,425 கோடி முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முதலீடு , மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு முக்கியமான ஒரு துறையான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தியில் கர்நாடகாவின் தலைமையை வலுப்படுத்த தயாராக உள்ளது .

மேலும், ராம்நகரா மாவட்டத்தில் உள்ள ஹரோஹள்ளி தொழிற்பேட்டைக்கு ரூ.2,150 கோடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது EVகள், EV அல்லாத வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு, விண்வெளி, தொழில்துறை மற்றும் விவசாயம் உள்ளிட்ட வாகனம் அல்லாத துறைகளுக்கான துல்லிய-பொறியியல் கூறுகளை தயாரிப்பதில் இந்த திட்டம் கவனம் செலுத்தும்.

மற்றொரு குறிப்பிடத்தக்க ஒப்புந்தத்தில், கர்நாடகாவின் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பெங்களூரின் உயர் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்காவில் ஒரு புதிய தரவு மையத்தை நிறுவுவதும் இதில் அடங்கும்.

அதேபோல், பெங்களூருவை தாண்டி, பல்லாரி, தார்வாட், கலபுர்கி மற்றும் விஜயநகர மாவட்டங்களில் உள்ள திட்டங்கள், தொழில்துறை முன்னேற்றத்தின் பலன்கள் மாநிலத்தின் அனைத்து இடங்களுக்கும் சென்று சேர்க்கும் விதமாக இந்த முதலீடுகள் ஒட்டுமொத்த மாநிலத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

இதுகுறித்து மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பிரியங்க் எம் கார்கே கூறுகையில், மாற்றத்தக்க வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பானது, மாநிலத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் என்றும், இது அனைவருக்குமான வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் இந்த விரைவான முடிவுகளை செயல்படுத்துவதன் மூலம் உருமாறும் வளர்ச்சியை இயக்குவதற்கான உறுதிப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று கூறினார்.

தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டீலா, ஐடி-பிடி அமைச்சர் பிரியங்க் கார்கே, விவசாய அமைச்சர் சாலுவராயசாமி, தலைமைச் செயலாளர் டாக்டர் ஷாலினி ரஜ்னீஷ், முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளர் எல்கே அதீக், கூடுதல் தலைமைச் செயலாளர் கவுரவ் குப்தா, தொழில்துறை முதன்மைச் செயலாளர் செல்வகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். .

கர்நாடக அரசின் இந்த அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள், தொழில்துறை முதலீடுகளுக்கான முன்னணி இடமாக கர்நாடகாவின் நிலைப்பாட்டையும், அதன் வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வையையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றே சொல்லலாம். எனவே, தமிழ்நாட்டில் இதுபோன்ற திட்டங்கள் அதிகப்படியாக கொண்டுவரப்பட்டு முதன்மை மாநிலமாக்கவேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+