பெங்களூரு: இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டம் பல்வேறு குடும்பங்களை அழித்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பலரும் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர் .
இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு ஏற்கனவே தமிழ்நாடு அரசு தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கியது. 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்கள் கொண்ட இந்த அமைப்பு தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த ரியல் மணி கேமிங் பிளாட்பார்ம்களுக்கு தடை விதித்தது. தமிழ்நாட்டைப் பின்பற்றி கர்நாடக மாநில அரசும் இப்படி ஒரு நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகி இருக்கிறது.

கர்நாடக மாநில அரசு ஆன்லைன் சூதாட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் கர்நாடக காவல்துறை திருத்த மசோதா 2025 ஐ தயாரித்திருக்கிறது. இதனை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்து சட்டமாக்க கர்நாடகா மாநில அரசு திட்டமிட்டு இருக்கிறது. இந்த வரைவு மசோதா சட்டமாக நடைமுறைக்கு வந்தால் கர்நாடக மாநிலத்தில் இன்டர்நெட் மற்றும் மொபைல் போன் செயலி வாயிலாக நடத்தப்படும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்படும்.
திறமை அடிப்படையில் விளையாடும் போட்டிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என இந்த வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது .மேலும் கர்நாடக மாநிலத்தில் இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை வழங்கக்கூடிய தளங்கள் அரசிடம் விண்ணப்பம் செய்து முறையான உரிமம் பெற்று இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காகவே கர்நாடக மாநில அரசு கர்நாடக ஆன்லைன் விளையாட்டு மற்றும் பந்தய ஒழுங்குமுறை ஆணையம் என்ற ஒரு அமைப்பை உருவாக்க இருக்கிறது .
இந்த ஆணையம் தான் ஒரு விளையாட்டு திறமை அடிப்படையில் விளையாடப்படுகிறதா இல்லை பணத்தின் அடிப்படையில் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து உரிமம் வழங்கும் அதிகாரத்தை பெற்றிருக்கும். இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளவற்றை மீறும் நபர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது . மீண்டும் மீண்டும் அதே தவறை தொடர்கிறார்கள் என்றால் மூன்று ஆண்டு சிறை தண்டனையோடு ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் சட்டவிரோத தலங்களில் சூதாட்டம் செய்பவர்கள் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அந்த வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆன்லைன் விளையாட்டு மற்றும் பந்தய ஒழுங்குமுறை ஆணையம் கர்நாடக மாநிலத்தின் அனைத்து ஆன்லைன் விளையாட்டு மட்டும் சூதாட்டத்தையும் ஒழுங்குப்படுத்தி கண்காணிக்கும் ஒரு அமைப்பாக செயல்பட இருக்கிறது.
இந்த அமைப்புக்கு தலைவராக சட்டம் ,பொது நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பத்தில் அனுபவம் வாய்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட இருக்கிறார். அது தவிர தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்து ஒருவர், நிதி துறையிலிருந்து ஒருவர் மற்றும் சமூக நல துறையில் இருந்து ஒருவர் என மூன்று உறுப்பினர்களையும் இந்த ஆணையம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2023ஆம் நிதியாண்டில் ஆன்லைன் விளையாட்டு துறை மதிப்பு 3.1 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டதாக இருந்தது அது 2024ஆம் நிதியாண்டில் 3.8 பில்லியன் டாலர்கள் என உயர்வு கண்டது . இந்த 3.8 பில்லியன் டாலர்கள் வருமானத்தில் 2.4 பில்லியன் டாலர்கள் ரியல் மணி கேமிங் பிரிவில் இருந்து தான் வந்திருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த துறை 9.2 பில்லியன் டாலர்கள் கொண்ட துறையாக வளரும் என சொல்லப்படுகிறது. எனவே இந்த துறைக்கு தடை விதிக்காமல் ஒழுங்குப்படுத்துவதே சரியான நடைமுறையாக இருக்கும் என E-Gaming Federation தலைமை செயல் அதிகாரி அனுராக் சக்சேனா தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications