பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தங்கள் நிறுவனத்தில் பணி புரியக்கூடிய 2 சதவீத ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்வதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த ஐடி துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2% ஊழியர்கள் பணிநீக்கம்: டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இதன் மூலம் தங்களுடைய வேலையை இழக்க இருக்கின்றனர். இந்த சூழலில் கர்நாடக மாநிலத்திற்கான ஐடி ஊழியர்களுக்கான யூனியன் கர்நாடக தொழில்துறையிடம் டிசிஎஸ் நிறுவனம் 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவது தொடர்பாக புகார் அளித்திருக்கிறது. அப்போது டிசிஎஸ் நிறுவனத்திடம் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கர்நாடக மாநில தொழில்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.

டிசிஎஸ் மீது நடவடிக்கையா?: இந்த சூழலில் டிசிஎஸ் நிறுவனத்தின் மீது கர்நாடக மாநில அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக கர்நாடக மாநில ஐடி துறை அமைச்சர் பிரியங்க் கார்கே ஈடி நவ் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் டிசிஎஸ் நிறுவனத்தின் மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கும் என வெளியாக கூடிய தகவல்கள் உண்மை இல்லை என தெரிவித்திருக்கிறார் . இது தனியார் துறை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அரசு எச்சரிக்கையாகவே இதனை கையாளும் என கூறியுள்ளார்.
அமைச்சர் கார்கே விளக்கம்: கர்நாடக மாநில அரசு ஐடி அல்லது பயோடெக் போன்ற எந்த துறைகளிலும் உள்ள தொழிற்சங்கங்களையும் அங்கீகரிக்கவில்லை என தெரிவித்திருக்கும் அவர் இந்த தொழிற்சங்கங்களை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்றாலும் எந்த ஒரு தொழில்துறை அமைப்பும் அல்லது தொழிற்சங்கமும் மாநில அரசின் தொழில்துறையை சந்தித்து தங்களுடைய குறைகளை தெரிவிப்பதற்கு உரிமை இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். இவர்கள் தனியார் துறை சம்பந்தப்பட்ட விஷயத்தில் தலையிட வேண்டும் என கூறுகிறார்கள் அரசு இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக தான் கையாளும் என தெரிவித்திருக்கிறார்.

அரசு எச்சரிக்கையாக கையாளும்:அரசு இந்த பிரச்சனையை முழுமையாக புரிந்து கொண்ட பிறகு இதில் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு உதவி செய்வதற்கு முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்திருக்கிறார். கர்நாடக மாநில ஐடி ஊழியர்கள் யூனியன் வழங்கிய புகார் தொடர்பாக ஐடி நிறுவனங்களை தொடர்பு கொண்டு அரசாங்கம் பேசியது என கூறி இருக்கும் அவர் , இது தொடர்பாக டிசிஎஸ் மீது நடவடிக்கையும் எடுப்பதற்கு இதுவரை அரசு திட்டமிடவில்லை என தெரிவித்திருக்கிறார் .
ஐடி நிறுவனங்களிடம் விளக்கம் கேட்ட அரசு: ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் பணிநீக்கத்துக்கு தங்களுடைய வணிகம் குறித்த தவறான கணக்கீட்டால் அதிகமானவர்களை வேலைக்கு எடுத்து விட்டதையும், ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டையும் காரணமாக கூறுகின்றனர் என பதிலளித்திருக்கும் அமைச்சர் கார்கே ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதற்கு ஐடி நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications