பெங்களூரு: பெங்களூரு நகரின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக 3000 கோடி ரூபாய் கடன் வாங்கப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு இருந்த அரசுகள் பெங்களூருவின் உள்கட்டமைப்புகளை பராமரிக்காமல் விட்டுவிட்டன. இதன் காரணமாக தற்போது பெங்களூர் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
பெங்களூருவின் பாபுசாபாளையா பகுதியில் 7 அடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் தமிழர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த பகுதியை பார்வையிட்ட முதலமைச்சர் சித்தராமையா பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இதற்கு முன்பு இருந்த அரசாங்கங்கள் பெங்களூருவின் பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டன. எனவே இந்த உள்கட்ட அமைப்பு பிரச்சனைகளை சரி செய்வதற்காக எனது அரசு 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது என கூறினார்.

மேலும் பெங்களூரில் பேரிடர் மேலாண்மை அமைப்பினை வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.ஒரு குறுகிய சாலையில் இவ்வளவு உயரமான கட்டிடம் கட்டுவதற்கு பெங்களூர் மாநகராட்சி ஆணையர் எப்படி அனுமதி கொடுத்தார் என்ற கேள்வியையும் அவர் முன் வைத்துள்ளார். இந்த கட்டிடத்திற்கு அனுமதி கொடுத்தது முதல் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் இதில் விசாரிக்கப்படுவர் என உறுதி அளித்த அவர் இது போன்ற ஒரு நிகழ்வு இனி பெங்களூரில் நடக்கக்கூடாது என தெரிவித்தார். அப்போது பெங்களூரு மாநகராட்சி ஆணையர் துஷார் கிரிநாத் முதலமைச்சர் உடன் வருகை தந்திருந்தார்.
இந்த கட்டிட இடிபாடுகளை சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிகிச்சைக்கு தேவையான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என கூறினார். பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையை பாபுசாளையா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.
இந்த கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடுபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஏழு அடுக்கு மாடி கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் மோகனை காவல்துறையினர் கைது செய்தனர். நான்கு மாடிகள் மட்டுமே கட்ட அனுமதி பெற்று 7 மாடிகள் கட்டியதாக காவல்துறையினர் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை கட்டிட இடிபாடுகளில் இருந்து 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன இவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது மற்றொரு சோகம்.
Written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications