1 லட்சம் வேலைவாய்ப்பு.. கனவு நகரத்தை உருவாக்கும் கர்நாடக அரசு..!

பெங்களூரு: இந்தியாவின் ஸ்டார்ட்அப் நகரம், சிலிக்கான் வேலி என புகழ்பெற்ற பெங்களூரு மாநகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் புதிதாக ஒரு நகரத்தை அமைக்கிறது கர்நாடக அரசு. இது கர்நாடக அரசின் கனவு திட்டமாக பார்க்கப்படுகிறது.

Knowledge Health Innovation Research-City (KHIR-City) எனப்படும் கேஹெச்ஐஆர் சிட்டியை அமைப்பதற்கான திட்ட பணிகளுக்கு வரும் 26 ஆம் தேதி கர்நாடக அரசு அடிக்கல் நாட்டுகிறது. பல்வேறு புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான ஒரு நகரத்தை பெங்களூருவுக்கு அருகிலேயே உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

1 லட்சம் வேலைவாய்ப்பு.. கனவு நகரத்தை உருவாக்கும் கர்நாடக அரசு..!

இதன் மூலம் அமெரிக்காவின் ரிசர்ச் ட்ரையாங்கிள் பார்க் (Research Triangle Park) மற்றும் சிங்கப்பூரின் பயோ போலீஸ் (Biopolis) போன்ற உலகின் முன்னணி ஆராய்ச்சி நகரங்களை போலவே இந்த நகரமும் உருவாக்கப்படும் என கர்நாடக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த நகரத்தை கட்டமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இந்த நகரத்திற்கான அடிக்கலை நாட்ட இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளை செய்த பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என சொல்லப்படுகிறது.

2000 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் இந்த இந்த நகரத்தில் முதல் கட்டமாக 500 ஏக்கர் பரப்பளவில் கட்டுமான பணிகள் நடைபெற இருக்கின்றன.

இந்த நகரம் கட்டி முடிக்கப்படும் போது 40000 கோடி ரூபாய் முதலீட்டினை ஈர்க்கும் என்றும் 1 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கர்நாடக அரசு தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி மறைமுகமாகவும் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும் எனக் கூறியுள்ளது. இந்த நகரமானது தொட்டபல்லபுரா (Doddaballapura) மற்றும் தோபாஸ்பேட் (Dobaspet)ஆகிய இரண்டு நகரங்களுக்கு இடையே அமைகிறது.

தற்போது பெங்களூருவில் இருக்கும் எலக்ட்ரானிக் சிட்டியை அடிப்படையாகக் கொண்டு இந்த நகரமும் உருவாக்கப்படுகிறது. கெம்பகோடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலேயே இந்த நகரம் கட்டமைக்கப்படுவதாக கர்நாடக மாநில அரசு தெரிவிக்கிறது.

இந்த நகர கட்டமைப்பு பணிகளை மேற்பார்வையிடுவதற்காக கர்நாடகா அரசு ஒரு ஆலோசனைக் குழுவையும் நியமனம் செய்துள்ளது. இதில் டாக்டர் தேவி செட்டி, கிரண் மசூம்ந்தர் ஷா மற்றும் மோகன்தாஸ் பை உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் .

இந்த நகரம் ஒரு ஏக்கருக்கு 100 பேர் என்ற மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் கட்டமைக்கப்பட உள்ளது. இந்த நகரம் செயல்பாட்டுக்கு வரும் போது கர்நாடகாவின் பொருளாதாரமும், ஏற்றுமதியும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

இதன் மூலம் பெங்களூரு சர்வதேச அளவில் இன்னும் முன்னணி நகரமாக மாறும் என கர்நாடக அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது. இங்கே உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்டவை இயங்கும் என கர்நாடகா அரசு உறுதி அளிக்கிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+