பஸ் கட்டணம் உயர போகுது.. அதிர்ச்சியில் மக்கள்..!!

கர்நாடக அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய ஒரு மாதத்திற்கும் குறைவான காலகட்டத்தில் பால் விலையை உயர்த்தியது இம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் அடுத்த பெரும் அதிர்ச்சியாகக் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) தனது பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை சமர்ப்பித்துள்ளது.

KSRTC நிர்வாகக் குழு கூட்டத்தில் அதிகாரிகள் கட்டண உயர்த்தும் திட்டத்தை உயர்மட்ட ஒப்புதலுக்காக முன் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கட்டண உயர்வுக்கான முக்கிய காரணம் ஜூன் காலாண்டில் KSRTC சுமார் ரூ.295 கோடி இழப்பு ஏற்பட்டதால் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிகிறது. KSRTC அமைப்பின் நஷ்டத்திற்கு முக்கியமான காரணம் இந்நிறுவனத்தின் இயக்க செலவு அதிகரிப்பு தான் என கட்டண உயர்வுக்கான கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பஸ் கட்டணம் உயர போகுது.. அதிர்ச்சியில் மக்கள்..!!

தும்கூரில் செய்தியாளர்களைச் சந்தித்த KSRTC தலைவர் எஸ்.ஆர். சீனிவாசன் கூறுகையில், பஸ் கட்டணத்தை உயர்த்த கோரி நிர்வாகக் குழு முக்கிய தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்தார். KSRTC அமைப்பு கடைசியாக பஸ் கட்டணத்தைத் திருத்தம் செய்தது 2019 ஆம் ஆண்டில்.

அப்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ.60 ஆக இருந்தது. இன்று அது ரூ.93 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஊழியர்களுக்கு அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டியது உள்ளது, இதற்கிடையில் KSRTC நஷ்டத்தை சந்தித்துள்ளது. எனவே கட்டணத்தை உயர்த்துவது முக்கியமானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை KSRTC ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். 2020 ஆம் ஆண்டில் இது செய்யப்படவில்லை. எனவே, 2024 ஆம் ஆண்டில் செய்ய வேண்டியுள்ளது, இதனால் நிதிநிலையைச் சரி செய்ய பஸ் கட்டண உயர்வு அவசியமானதாக உள்ளது என KSRTC தலைவர் எஸ்.ஆர். சீனிவாசன் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் முழுவதும் சுமார் 8,000 பேருந்துகளைக் கொண்ட KSRTC பழைய பேருந்துகளைப் பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு புதிய பேருந்துகளை வாங்க இந்த கட்டண உயர்வு உதவும். சமீபத்தில் கர்நாடக அரசு அதன் நல திட்டங்களுக்கு உதவுவதற்கு எரிபொருள் விலையை உயர்த்திய இரண்டாவது வாரத்தில் பஸ் கட்டணம் உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+