இந்தியாவின் ஐடி நகரமாக பெங்களூரு செயல்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் கல்வி நகரமாக கேவின் நகரத்தை மாற்ற வேண்டும் என கர்நாடகா அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் கர்நாடகா அரசு knowledge well being and innovation என்ற பொருளில் Kwin நகரத்தை கட்டமைக்க அடிக்கல் நாட்டியது. இந்த கேவின் நகரத்தை சர்வதேச கல்வி மையமாக மாற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இந்த நகரத்தில் உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட வேண்டும் என மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் கிளையை நிறுவ கேவின் நகரத்தில் நிலத்தை வழங்குவதற்கு கர்நாடக அரசு முன்வந்துள்ளது.
டாடா நிறுவனம் இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தோடு இணைந்து ஒரு மருத்துவ கல்வி நிறுவனத்தை அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறது. 500 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த மருத்துவக் கல்வி நிறுவனம் அமைக்கப்பட இருக்கிறது. இதனை கேவின் நகரத்தில் அமைக்க வேண்டும் என கர்நாடக மாநில அரசுக்கு நிலத்தையும் வழங்கி உள்ளது.
கர்நாடக மாநில தொழில் மற்றும் உள் கட்டமைப்பு துறை அமைச்சர் எம் பி பாட்டில் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். டாடா மற்றும் ஐஐஎஸ்சி இணைந்து மருத்துவ நிறுவனம் அமைக்க இருக்கின்றன. இது போன்ற பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களும் இந்த கேவின் நகரத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம் என அவர் கூறியுள்ளார்.
கல்வி, திறன் மேம்பாடு மற்றும் புதுமைகளின் நகரமாக கேவின் நகரம் இருக்க வேண்டும் எனவும் உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள் செயல்படும் நகரமாக மாற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், ப்ளூம்பெர்க் கல்வி நிறுவனம், லிவர்பூல் பல்கலைக்கழகம், கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம், யார்க் பல்கலைக்கழகம் என உலகின் முன்னணி கல்வி நிறுவனங்களோடு கர்நாடகா அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர்களின் கல்வி மையங்களை இங்கே நிறுவ தேவையான நிலத்தை வழங்க முன் வருவதாகவும் எம் பி பாட்டில் கூறியுள்ளார்.
யுஜிசி விதிமுறைகளை பயன்படுத்தி 500 சிறந்த வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் வளாகங்களை கேவின் நகரத்தில் அமைக்க வேண்டும் என நாங்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம், இந்த திட்டம் கல்வி மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கான மையமாக கேவின் நகரத்தை மாற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications