பெங்களூர்: சாமானிய மக்களின் தினசரி வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் உணவு பொருட்களின் விலை உயர்ந்ததை தொடர்ந்து தற்போது அனைத்து பொருட்கள் மற்றும் சேவையின் விலையை உயர்த்திம் வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் இன்று பெட்ரோல், டீசல் விலையை அம்மாநில அரசு விற்பனை வரியை உயர்த்தியது மூலம் தடாலடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில், பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.102.86 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.88.94 ஆகவும் உயர்ந்துள்ளது.

கர்நாடகா மாநில நிதித்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த விலை உயர்வு ஜூன் 15 ஆம் தேதி முதல் உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி உடனடியாக அமலாக்கம் செய்யும் காரணத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுவாக அரசு விலை மாற்றம் செய்தால் நள்ளிரவு முதல் புதிய விலையை அமலாக்கம் செய்யப்படும், ஆனால் கர்நாடக அரசு அதிரடியாக உடனடியாக அமலாக்கம் செய்தது மூலம் தற்போது விலை உயரும் முன்பு பெட்ரோல், டீசல் வாங்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
கர்நாடக அரசு ஜூன் 15 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தியதை அடுத்து, மாநிலத்தில் உடனடியாக எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன. இந்த அறிவிப்பின்படி, கர்நாடக விற்பனை வரி (KST) பெட்ரோலுக்கு 25.92 சதவீதத்திலிருந்து 29.84 சதவீதமாகவும், டீசலுக்கு 14.3 சதவீதத்தில் இருந்து 18.4 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அகில கர்நாடக பெட்ரோலியம் டீலர்ஸ் சங்கம் (Akhila Karnataka Petroleum Dealers Association) தகவல் படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.3 மற்றும் ரூ.3.02 என்ற அளவில் உயர்ந்துள்ளன. இதன் மூலம் பெங்களூருவில், திருத்தப்பட்ட புதிய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.88.94 ஆகவும் உள்ளது.
ஜூன் 15 ஆம் தேதி கர்நாடக மாநில நிதித்துறை வெளியிட்ட அறிவிப்பில், விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன் கர்நாடக மாநிலத்தில் கடைசியாகச் செய்யப்பட்ட திருத்தம் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது, கோவிட்-19 தொற்றுக்குப் பிறகு பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சி பாதைக்குத் திருப்ப வேண்டும் என்பதற்காக, முந்தைய பாஜக மாநில அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.13.30ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.19.40ம் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் ஆட்சியில் காங்கிரஸ் அரசு ஐந்து உத்தரவாதங்களைச் செயல்படுத்துவதற்கு ஆண்டுதோறும் ரூ.50,000 கோடி முதல் ரூ.60,000 கோடி வரை செலவிட வேண்டியுள்ளது.

எரிபொருள் விலை உயர்வு மூலம் ஒரு நிதியாண்டுக்கு ரூ.2,500 கோடி முதல் ரூ.2,800 கோடி வரை கூடுதல் வருவாயைத் திரட்ட உதவும் என்று மூத்த நிதித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் புதிய விலை நிலவரத்தின் பட்டியல்.
| நகரம் | இன்றைய விலை | நேற்றைய விலை |
| பாகல்கோட் | ₹ 103.50 | ₹ 100.58 |
| பெங்களூர் | ₹ 102.84 | ₹ 99.84 |
| பெங்களூர் கிராமம் | ₹ 102.99 | ₹ 99.91 |
| பெல்காம் | ₹ 103.74 | ₹ 100.04 |
| பெல்லாரி | ₹ 104.80 | ₹ 101.68 |
| பிதார் | ₹ 103.18 | ₹ 100.18 |
| பிஜப்பூர் | ₹ 102.96 | ₹ 100.02 |
| சாம்ராஜ்நகர் | ₹ 102.96 | ₹ 100.00 |
| சிக்கபல்லாபுரா | ₹ 102.84 | ₹ 99.84 |
| சிக்மகளூர் | ₹ 103.70 | ₹ 100.26 |
| சித்ரதுர்கா | ₹ 104.53 | ₹ 102.31 |
| தக்ஷின கன்னடா | ₹ 102.03 | ₹ 99.03 |
| தட்சிண கன்னட | ₹ 102.03 | ₹ 99.03 |
| தாவங்கரே | ₹ 104.54 | ₹ 101.36 |
| தார்வாட் | ₹ 102.61 | ₹ 99.61 |
| கடக் | ₹ 103.15 | ₹ 100.15 |
| குல்பர்கா | ₹ 102.61 | ₹ 99.61 |
| ஹாசன் | ₹ 102.57 | ₹ 100.03 |
| ஹாவேரி | ₹ 103.79 | ₹ 100.31 |
| குடகு | ₹ 104.09 | ₹ 101.07 |
| கோலார் | ₹ 102.78 | ₹ 99.71 |
| கொப்பல் | ₹ 103.95 | ₹ 100.95 |
| மாண்டியா | ₹ 103.08 | ₹ 99.51 |
| மைசூர் | ₹ 102.53 | ₹ 99.40 |
| ராய்ச்சூர் | ₹ 103.52 | ₹ 99.74 |
| ராமநகரா | ₹ 103.29 | ₹ 100.30 |
| ஷிமோகா | ₹ 103.52 | ₹ 101.16 |
| தும்கூர் | ₹ 103.35 | ₹ 100.35 |
| உடுப்பி | ₹ 102.53 | ₹ 99.34 |
| உத்தர கன்னடா | ₹ 103.85 | ₹ 100.40 |
| உத்தர கன்னடம் | ₹ 103.85 | ₹ 100.40 |
| விஜயநகரா | ₹ 104.02 | ₹ 101.86 |
| யாத்கிர் | ₹ 103.69 | ₹ 100.33 |
கர்நாடக மாநிலத்தில் புதிய டீசல் விலை
| நகரம் | இன்றைய விலை | நேற்றைய விலை |
| பாகல்கோட் | ₹ 90.06 | ₹ 86.63 |
| பெங்களூர் | ₹ 89.43 | ₹ 85.93 |
| பெங்களூர் கிராமம் | ₹ 89.57 | ₹ 86.00 |
| பெல்காம் | ₹ 90.27 | ₹ 86.14 |
| பெல்லாரி | ₹ 91.23 | ₹ 87.62 |
| பிதார் | ₹ 89.77 | ₹ 86.27 |
| பிஜப்பூர் | ₹ 89.57 | ₹ 86.12 |
| சாம்ராஜ்நகர் | ₹ 89.54 | ₹ 86.08 |
| சிக்கபல்லாபுரா | ₹ 89.43 | ₹ 85.93 |
| சிக்மகளூர் | ₹ 90.10 | ₹ 86.23 |
| சித்ரதுர்கா | ₹ 90.87 | ₹ 88.07 |
| தக்ஷின கன்னடா | ₹ 88.67 | ₹ 85.17 |
| தட்சிண கன்னட | ₹ 88.67 | ₹ 85.17 |
| தாவங்கரே | ₹ 90.87 | ₹ 87.21 |
| தார்வாட் | ₹ 89.25 | ₹ 85.75 |
| கடக் | ₹ 89.74 | ₹ 86.24 |
| குல்பர்கா | ₹ 89.25 | ₹ 85.75 |
| ஹாசன் | ₹ 89.09 | ₹ 86.01 |
| ஹாவேரி | ₹ 90.32 | ₹ 86.38 |
| குடகு | ₹ 90.44 | ₹ 86.91 |
| கோலார் | ₹ 89.38 | ₹ 85.82 |
| கொப்பல் | ₹ 90.46 | ₹ 86.96 |
| மாண்டியா | ₹ 89.65 | ₹ 85.63 |
| மைசூர் | ₹ 89.15 | ₹ 85.54 |
| ராய்ச்சூர் | ₹ 90.09 | ₹ 85.88 |
| ராமநகரா | ₹ 89.84 | ₹ 86.35 |
| ஷிமோகா | ₹ 89.99 | ₹ 87.08 |
| தும்கூர் | ₹ 89.90 | ₹ 86.40 |
| உடுப்பி | ₹ 89.12 | ₹ 85.45 |
| உத்தர கன்னடா | ₹ 90.31 | ₹ 86.40 |
| உத்தர கன்னடம் | ₹ 90.31 | ₹ 86.40 |
| விஜயநகரா | ₹ 90.52 | ₹ 87.66 |
| யாத்கிர் | ₹ 90.23 | ₹ 86.40 |

தமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல் விலை
| நகரம் | இன்றைய விலை | நேற்றைய விலை |
| அரியலூர் | ₹ 102.00 | ₹ 101.76 |
| செங்கல்பட்டு | ₹ 101.30 | ₹ 101.20 |
| சென்னை | ₹ 100.75 | ₹ 100.75 |
| கோயம்புத்தூர் | ₹ 101.32 | ₹ 101.24 |
| கடலூர் | ₹ 102.87 | ₹ 103.13 |
| தருமபுரி | ₹ 102.07 | ₹ 102.39 |
| திண்டுக்கல் | ₹ 101.54 | ₹ 101.80 |
| ஈரோடு | ₹ 101.25 | ₹ 101.81 |
| கள்ளக்குறிச்சி | ₹ 102.63 | ₹ 102.76 |
| காஞ்சிபுரம் | ₹ 101.12 | ₹ 101.12 |
| கன்னியாகுமரி | ₹ 101.99 | ₹ 101.81 |
| கரூர் | ₹ 101.17 | ₹ 101.04 |
| கிருஷ்ணகிரி | ₹ 102.46 | ₹ 102.82 |
| மதுரை | ₹ 101.46 | ₹ 101.46 |
| மயிலாடுதுரை | ₹ 102.10 | ₹ 102.10 |
| நாகப்பட்டினம் | ₹ 102.20 | ₹ 102.20 |
| நாமக்கல் | ₹ 101.19 | ₹ 101.48 |
| நீலகிரி | ₹ 103.07 | ₹ 103.07 |
| பெரம்பலூர் | ₹ 101.66 | ₹ 101.66 |
| புதுக்கோட்டை | ₹ 101.61 | ₹ 101.61 |
| ராமநாதபுரம் | ₹ 101.59 | ₹ 102.46 |
| ராணிபேட்டை | ₹ 101.81 | ₹ 101.81 |
| சேலம் | ₹ 101.61 | ₹ 101.31 |
| சிவகங்கை | ₹ 101.95 | ₹ 101.73 |
| தேனி | ₹ 101.90 | ₹ 102.27 |
| தென்காசி | ₹ 101.42 | ₹ 101.42 |
| தஞ்சாவூர் | ₹ 101.73 | ₹ 101.78 |
| திருவாரூர் | ₹ 102.01 | ₹ 102.01 |
| திருச்சிராப்பள்ளி | ₹ 101.54 | ₹ 101.21 |
| திருநெல்வேலி | ₹ 101.06 | ₹ 101.62 |
| திருப்பத்தூர் | ₹ 102.87 | ₹ 102.87 |
| திருப்பத்தூர் | ₹ 102.87 | ₹ 102.87 |
| திருப்பூர் | ₹ 101.66 | ₹ 101.70 |
| திருவள்ளூர் | ₹ 100.83 | ₹ 100.92 |
| திருவண்ணாமலை | ₹ 102.04 | ₹ 102.55 |
| தூத்துக்குடி | ₹ 101.49 | ₹ 101.49 |
| வேலூர் | ₹ 102.36 | ₹ 102.06 |
| விழுப்புரம் | ₹ 101.90 | ₹ 101.90 |
| விருதுநகர் | ₹ 101.79 | ₹ 101.88 |
தமிழ்நாட்டில் இன்றைய டீசல் விலை
| நகரம் | இன்றைய விலை | நேற்றைய விலை |
| அரியலூர் | ₹ 93.60 | ₹ 93.36 |
| செங்கல்பட்டு | ₹ 92.88 | ₹ 92.77 |
| சென்னை | ₹ 92.34 | ₹ 92.34 |
| கோயம்புத்தூர் | ₹ 92.92 | ₹ 92.85 |
| கடலூர் | ₹ 94.41 | ₹ 94.66 |
| தருமபுரி | ₹ 93.66 | ₹ 93.97 |
| திண்டுக்கல் | ₹ 93.14 | ₹ 93.40 |
| ஈரோடு | ₹ 92.86 | ₹ 93.40 |
| கள்ளக்குறிச்சி | ₹ 94.17 | ₹ 94.30 |
| காஞ்சிபுரம் | ₹ 92.70 | ₹ 92.70 |
| கன்னியாகுமரி | ₹ 93.60 | ₹ 93.43 |
| கரூர் | ₹ 92.78 | ₹ 92.65 |
| கிருஷ்ணகிரி | ₹ 94.04 | ₹ 94.39 |
| மதுரை | ₹ 93.08 | ₹ 93.08 |
| மயிலாடுதுரை | ₹ 93.70 | ₹ 93.70 |
| நாகப்பட்டினம் | ₹ 93.80 | ₹ 93.80 |
| நாமக்கல் | ₹ 92.80 | ₹ 93.08 |
| நீலகிரி | ₹ 94.47 | ₹ 94.47 |
| பெரம்பலூர் | ₹ 93.27 | ₹ 93.27 |
| புதுக்கோட்டை | ₹ 93.22 | ₹ 93.22 |
| ராமநாதபுரம் | ₹ 93.20 | ₹ 94.05 |
| ராணிபேட்டை | ₹ 93.37 | ₹ 93.37 |
| சேலம் | ₹ 93.21 | ₹ 92.92 |
| சிவகங்கை | ₹ 93.56 | ₹ 93.34 |
| தேனி | ₹ 93.51 | ₹ 93.87 |
| தென்காசி | ₹ 93.05 | ₹ 93.05 |
| தஞ்சாவூர் | ₹ 93.33 | ₹ 93.38 |
| திருவாரூர் | ₹ 93.61 | ₹ 93.61 |
| திருச்சிராப்பள்ளி | ₹ 93.14 | ₹ 92.83 |
| திருநெல்வேலி | ₹ 92.70 | ₹ 93.25 |
| திருப்பத்தூர் | ₹ 94.41 | ₹ 94.41 |
| திருப்பத்தூர் | ₹ 94.41 | ₹ 94.41 |
| திருப்பூர் | ₹ 93.25 | ₹ 93.29 |
| திருவள்ளூர் | ₹ 92.41 | ₹ 92.50 |
| திருவண்ணாமலை | ₹ 93.60 | ₹ 94.10 |
| தூத்துக்குடி | ₹ 93.12 | ₹ 93.12 |
| வேலூர் | ₹ 93.90 | ₹ 93.62 |
| விழுப்புரம் | ₹ 93.46 | ₹ 93.46 |
| விருதுநகர் | ₹ 93.41 | ₹ 93.50 |
More From GoodReturns

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications