சென்னையை புரட்டிப்போட்ட கனமழை தற்போது பெங்களூர் நகரை ஆட்டிவித்து வருகிறது. பெங்களூரு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) 'மஞ்சள் எச்சரிக்கை' விடுத்துள்ளது. இதனால், பெங்களூரு நகர நிர்வாகம், புதன்கிழமை (அக்டோபர் 23) அன்று அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளும் விடுமுறை அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து, அடுத்த சில மணிநேரத்தில் கர்நாடக அரசின் எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பயோடெக்னாலஜி துறை, பெங்களூரில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும், தங்கள் ஊழியர்கள் கனமழை பெய்யும் காரணத்தால் புதன்கிழமை (அக்டோபர் 23) அன்று வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கும்படி பரிந்துரைத்துள்ளது.

பெங்களூரில் அவுட்டர் ரிங் சாலை, சர்ஜாபுரா, யெலஹங்கா, வொயிட்பீல்டு போன்ற முக்கியமான பகுதிகளில் இருக்கும் பெரும்பலான குடியிருப்புகள், ஐடி பார்களுக்குகள் தற்போது கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இன்று மதியம் பெய்த மழை RMZ எகோஸ்பேஸ், மான்யத்தா டெக் பார்க் உள்ளிட்ட பல டெக் பார்க்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள 'மஞ்சள் எச்சரிக்கை'யின்படி, அக்டோபர் 22, 2024 மாலை 1:30 மணி முதல் அக்டோபர் 23, 2024 காலை 8:30 மணி வரை கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இதனால், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், IT, BT மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கர்நாடக அரசின் ITBT அமைப்பு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் வறட்சியாக இருந்த பெங்களூர், அக்டோபர் மாதத்தில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தரவுகளின்படி, வழக்கத்தை விட கிட்டத்தட்ட 50 சதவீதம் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிகிறது.
அக்டோபர் 1 முதல் 21 வரையிலான காலத்தில் மட்டும் பெங்களூரு நகரத்தில் 156.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது வழக்கமான 104.6 மில்லிமீட்டரை விட கிட்டத்தட்ட 50% அதிகமாகும். அதேபோல், பெங்களூரு புறநகர் பகுதியில் இதேகாலக்கட்டத்தில் 136.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது, இது வழக்கமான 109.9 மில்லிமீட்டரை விட 24% அதிகமாகும்.
இதேவேளையில் பெங்களூர் மைய நகரத்தை பார்த்தால் அக்டோபர் 1 முதல் 21 வரையிலான காலத்தில் மட்டும் 247 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது, இது வழக்கமான 120 மில்லிமீட்டரை விட மிகப்பெரிய அளவில் அதிகமாகும். மேலும் HAL விமான நிலையத்தில் சராசரி அளவான 129 மில்லிமீட்டரை விட 228 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அக்டோபர் 15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து, பெங்களூரில் தொடர்ந்து மழை பெற்று வருகிறது. திங்கள்கிழமை காலை 8:30 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் பெங்களூரில் 61.9 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் HAL விமான நிலையத்தில் 41.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும், திங்கள்கிழமை காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, பெங்களூரில் கூடுதலாக 5.5 மில்லிமீட்டர் மழை பெய்ததுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தரவுகள் கூறுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications