பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சர்வதேச விமான நிலையம் அருகே மிகப்பெரிய பேட்டரி தயாரிப்பு ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இன்டர்நேஷனல் பேட்டரி கம்பெனி எனப்படும் நிறுவனம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் 390 கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய பேட்டரி உற்பத்தி ஆலையை நிறுவ இருக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில தொழில்துறை அமைச்சர் எம் பி பாட்டில் கலந்து கொண்டு ஆலைக்கு அடிக்கல் நாட்டினார்.

இன்டர்நேஷனல் பேட்டரி கம்பெனி இங்கே மின்சார இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு தேவையான லித்தியம் இயான் பேட்டரிகளை உற்பத்தி செய்ய இருக்கிறது. மகாநகர் கேஸ் லிமிடெட் நிறுவனத்தோடு இணைந்து ஐபிசி நிறுவனம் இந்த பேட்டரி உற்பத்தி ஆலையை நிறுவுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பாட்டில் தேவனஹல்லி பகுதியில் இருக்கும் தொழில் பூங்காவில் 390 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பேட்டரி உற்பத்தி ஆலை அமைக்கப்படுகிறது என தெரிவித்தார்.
முதல் கட்டமாக இந்த ஆலை மூலம் நேரடியாக 300 வேலை வாய்ப்புகள் உருவாகும் எனக் கூறினார். மேலும் இங்கே உற்பத்தி செய்யப்படக்கூடிய பேட்டரிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனக் கூறினார்.
இந்த பேட்டரி உற்பத்தி நிறுவனத்திற்காக ஃபாக்ஸ் கான் ஆலைக்கு அருகே 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். அடுத்த ஒன்பது மாதங்களில் இந்த ஆலையின் கட்டுமான பணிகள் முடிந்து உற்பத்தி பணிகள் தொடங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு தேவையான பிரத்தியேக வடிவமைப்பு கொண்ட பேட்டரிகள் இங்கே தயார் செய்யப்படும் என அமைச்சர் பாட்டில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் தான் முதன்முறையாக இப்படி ஒரு ஆலை அமைக்கப்படுகிறது என பெருமிதம் தெரிவித்தார்.
ஐபிசி நிறுவனம் தற்போது தென்கொரியாவில் 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உற்பத்தி ஆலை நிறுவி லித்தியன் இயான் செல்களை தயாரிக்கிறது. பின்னர் அவை பேட்டரிகளாக ஒருங்கிணைக்க இந்தியாவுக்கு அனுப்பப்படுகின்றன. தற்போது உற்பத்தி ஆலையே இந்தியாவில் நிறுவப்படுகிறது.
முதலில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு பயன்படும் வகையிலான பேட்டரிகள் இங்கே உற்பத்தி செய்யப்படும் என்றும் பின்னர் மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் தயாரிக்கப்படும் என்றும் ஐபிசி நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தியாவில் மின்சார வாகன சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அது சார்ந்த தொழில்களும் ஆலைகளும் அதிகளவில் அமைக்கப்பட்டு வருகின்றன.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications