இந்தியாவில் வாடகைக்கு வீட்டினை விடுபவர்கள் மற்றும் வீட்டில் வாடகைக்கு வசிப்பவர்களுக்கு என தனிப்பட்ட வழிகாட்டுதல்களும் விதிமுறைகளும் நடைமுறையில் கிடையாது. நாட்டிலேயே வாடகை சந்தை மதிப்பு அதிகமாக கொண்ட நகரமாக பெங்களூரு இருக்கிறது.
பெங்களூரு வாடகை சந்தை: இந்தியாவின் ஐடி நகரமாகவும் ஸ்டார்ட் அப் தலைநகரமாகவும் பெங்களூரு திகழ்ந்து வருகிறது. இங்கே வீடுகள் மற்றும் அலுவலகங்கள் வாடகைக்கு எடுக்கப்படுவதும் அதிகமாக இருக்கிறது. இதில் வாடகைதாரர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் வீட்டு உரிமையாளர்கள் மோசமாக நடந்து கொள்வதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

வாடகை சட்டத்தில் திருத்தம்: இதனை அடுத்து கர்நாடக மாநில அரசு தங்களுடைய வாடகை சட்டத்தில் புதிய மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறது . கர்நாடக அரசு தங்களுடைய வாடகைச் சட்டம் 1999 இல் சில திருத்தங்களை கொண்டு வருவதற்கு முடிவு செய்து இருக்கிறது. இதன்படி கர்நாடக மாநிலத்தில் வாடகைக்கு குடியிருக்க கூடிய ஒரு நபர் தன்னுடைய அந்த வீட்டு உரிமையாளரின் அனுமதி பெறாமல் அந்த குடியிருப்பனை வேறு ஒருவருக்கு இணை வாடகைக்கு விடுகிறார் எனும் பொழுது அவருக்கு வழக்கமாக 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் அந்த அபராத தொகையை 50,000 ரூபாயாக உயர்த்தியுள்ளனர்.
அபராதம் உயர்வு: எனவே இனி உரிமையாளரின் அனுமதி இல்லாமல் எந்த வாடகைதாரரும் தன்னுடைய குடியிருப்பை வேறு யாருக்கும் இணை வாடகைக்கு விட முடியாது. அவ்வாறு விட்டால் அவர்களுக்கு 50000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கர்நாடக மாநில சட்டத்துறை அமைச்சர் பாட்டில் தலைமையிலான குழு இந்த திருத்தங்களை கொண்டு வரலாம் என ஒப்புதல் தெரிவித்து இருக்கிறது .வரக்கூடிய சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே இந்த மாற்றம் அமல்படுத்தப்பட்டு சட்டமாக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
புரோக்கர்களுக்கு அபராதம்: சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய வகையில் இந்த சட்டத்தை வலுப்படுத்த கர்நாடக மாநில அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது. அதே போல இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத அங்கீகரிக்கப்படாத ப்ரோபெர்ட்டி புரோக்கர்கள் ,ஏஜென்ட்களுக்கும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசிடம் பதிவு செய்வது அவசியம்: புரோக்கர்களாக இருப்பவர்கள் அரசிடம் முறையான பதிவு செய்து அனுமதி பெற்று இருக்க வேண்டும் , அவ்வாறு அனுமதி பெறாதவர்களுக்கு இதற்கு முன்பு வரை 2000 ரூபாய் அபராதம் இருந்தது அதனை 25,000 ரூபாயாக அரசு உயர்த்தி இருக்கிறது. இந்த தவறை திரும்பத் திரும்ப செய்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் என அபராதம் விதிக்கப்படும் .
ஆன்லைன் தளம்: கர்நாடகா மாநில அரசு அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய வாடகை ஒப்பந்தங்களை பதிவேற்றம் செய்வதற்கான ஆன்லைன் தளத்தையும் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் வாடகை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எளிமையாக தீர்வு காண முடியும் என்றும் அனைத்தும் வெளிப்படை தன்மையுடன் நடைபெறும் என்றும் கர்நாடக அரசு நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.
வாடகைக்கு கட்டுப்பாடு: மேலும் வாடகைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் அரசு முடிவு செய்துள்ளது., அதாவது சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உரிமையாளர்களுக்கு வருமானம் கிடைப்பதையும், வாடகை தாரர்களுக்கு அடிக்கடி வாடகை உயர்வை தடுக்கவும் இது உதவும். அரசு குறிப்பிட்ட அளவுக்குள் தான் வாடகை இருக்க வேண்டும் என வழிகாட்டுதல்களை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications