சீனா அமெரிக்கா பிரச்சனைக்கு மத்தியில் உலகளவில் மாற்று உற்பத்தி தளங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் இந்தியா இதற்கு முதன்மையான தேர்வாக இருக்கும் வேளையில், பங்காளாதேஷ் மூலம் இந்தியாவுக்கு டெக்ஸ்டைல் துறையில் அதிகப்படியான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
இதை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள கர்நாடகா அரசு பல்லாரி அருகே சஜனீராயணகோட்டையில் மிகவும் பிரத்தியேகமான முறையில் ஜீன்ஸ் பார்க்கை நிறுவ திட்டமிட்டுள்ளது. பங்களாதேஷ் நாட்டில் அரசியல் பிரச்சனை வெடித்தது முதல் அந்நாட்டின் வர்த்தகம் இன்மும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை, இதனால் பங்களாதேஷ் நாட்டில் வர்த்தகம் செய்து வந்த பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தனது வர்த்தகத்தை மாற்றி வருகிறது.

உலகளாவிய ஆடைத் நிறுவனங்கள் பங்களாதேஷ் அரசியல் பிரச்சனை தொடர்ந்து இந்தியாவுக்கு குறிப்பாக திருப்பூர்-க்கு அதிகப்படியான வர்த்தகத்தை மாற்றி வரும் வேளையில், கர்நாடகா-விற்கும் சில வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளது. ஏற்கனவே பல்லாரி பகுதி ஜீன்ஸ் தயாரிப்பு சார்ந்த தொழில்கள் அதிகமாக இருக்கும் வேளையில் பங்களாதேஷ் நாட்டின் வர்த்தகம் பல்லாரிக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் தான் கர்நாடக அரசு சுமார் 154 ஏக்கர் பரப்பளவில் ஜீன்ஸ் பார்க் அமைக்க திட்டமிட்டு உள்ளது. இந்த ஜீன்ஸ் பார்க்-ல் உலகளாவிய டெனிம் உற்பத்தியாளர்களிடமிருந்து கணிசமான முதலீடுகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாட மாநிலத்தின் பெரிய மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் எம்.பி.பட்டீல், திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக உறுதிப்படுத்தினார். பங்களாதேஷ் வீழ்ச்சி இந்தியாவுக்கு சாதகமாக மாறியுள்ளது. இந்த நிலையில் மாற்று உற்பத்தி தளங்களைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு இந்தியா சிறப்பான தேர்வாக உள்ளதாக தெரிவித்தார்.
இந்த மாற்றத்தை பயன்படுத்திக் கொள்ள கர்நாடக மாநிலத்தில் பல்லாரி பகுதியில் ஏற்கனவே சுமார் 500 ஜீன்ஸ் உற்பத்தி ஆலைகள் இருக்கும் வேளையில் இத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 154 ஏக்கர் பரப்பளவில் ஜீன்ஸ் பார்க் அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இந்திய டெக்ஸ்டைல் துறையின் மதிப்பு 2030 ஆம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் இலக்கை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வகுத்துள்ளார், இதேவேளையில் டெக்ஸ்டைல் துறையில் சுமார் 6 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
இந்திய டெக்ஸ்டைல் துறையின் ஏற்றுமதி சிறப்பாந வளர்ச்சியை அடைந்து வருகிறது. 2024 அக்டோபர் மாதத்தில் நாட்டின் மொத்த டெக்ஸ்டைல் ஏற்றுமதி வருடாந்திர அடிப்படையில் 11.56% அதிகரித்து 1.83 பில்லியன் டாலர்களை எட்டியது. குறிப்பிடத்தக்க வகையில், ஆடை ஏற்றுமதி அதே காலகட்டத்தில் 35% வருடாந்திர வளர்ச்சியைக் கண்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications