பெங்களூரு: கர்நாடக அரசு குளோபல் கெப்பாசிலிட்டி சென்டர் எனப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய கிளைகளுக்கான ஒரு தனி நகரத்தையே உருவாக்க திட்டமிட்டுள்ளது.
பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் தங்களுடைய கிளைகளை நிறுவுவதற்கு முன்வந்துள்ளன.. இவ்வாறு வரக்கூடிய நிறுவனங்களின் விருப்பமான இடமாக பெங்களூர் நகரம் இருக்கிறது இந்த நிலையில் தான் கர்நாடக அரசு ஜிசிசி மையங்களுக்கு என்ற ஒரு நகரத்தை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

ஒரு பன்னாட்டு நிறுவனம் தங்களுடைய இன் சோர்ஸ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மற்றும் பிற தொடர்புடைய தொழில் செயல்முறைகளை கையாளும் ஒரு அலுவலகத்தை வெளிநாட்டில் அமைப்பது தான் ஜிசிசி எனப்படும் குளோபல் கெப்பாபிலிட்டி சென்டர் என அறியப்படுகிறது.
இந்தியாவில் தற்போது பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய ஜிசிசி மையங்களை அமைத்து வருகின்றன. இதில் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்கள் அதிக எண்ணிக்கையிலான ஜிசிசி மையங்களை கொண்டிருக்கும் நகரங்களாக இருக்கின்றன.
இந்த நிலையில் கர்நாடக அரசு ஜிசிசி மையங்களை அதிகரிக்கும் பொருட்டு ஒரு தனி நகரத்தையே உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ஒரு குழுவையும் நியமனம் செய்துள்ளது.
எனவே ஒரு குறிப்பிட்ட பகுதியானது தேர்வு செய்யப்பட்டு அங்கே உற்பத்தி அல்லாத தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த இடம் பொருத்தமாக இருக்கும் என்பதற்கான ஆய்வு பணிகள் தற்போது முடக்கி விடப்பட்டுள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய ஜிசிசி மையங்களை அமைக்க மிகவும் பொருத்தமான வசதிகள் அனைத்தும் இங்கே செய்து தரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் என்ற அடிப்படையில் இந்த ஜிசிசி நகரத்தில் உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகள் ஏற்படுத்தி தரப்பட உள்ளன. 2024 பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டில் இது குறித்த முக்கியமான அறிவிப்பை அரசு வெளியிடும் என கர்நாடகா அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
வரும் 19 மற்றும் 21 ஆம் தேதிகளில் பெங்களூருவில் இந்த தொழில்நுட்ப மாநாடு நடைபெற இருக்கிறது. மேலும் இந்த ஜிசிசி மையத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய ஐடி கொள்கையும் அடுத்த ஆண்டு வெளியாகும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
அண்மையில் தான் கர்நாடக அரசு 5,000 ஏக்கர் பரப்பளவில் கேவின் எனப்படும் அறிவு சார்ந்த தொழில்நுட்ப மற்றும் புதுமைகளுக்கான நகரத்திற்கு அடிக்கல் நாட்டியது. அடுத்ததாக ஜிசிசி மையங்களுக்காகவும் ஒரு தனி நகரத்தை அமைக்க இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் தற்போது இருக்கும் ஜிசிசி மையங்களில் 30% பெங்களூரில் தான் செயல்பட்டு வருகிறது.
அதேபோல ஜிசிசி மையங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது பெங்களூருவில் தான் 34 % பேர் வேலை செய்கிறார்கள்.
செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் ,ஆய்வு மற்றும் மேம்பாடு ஆகிய பிரிவுகளில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஜிசிசி கொள்கையை கொண்டு வந்த மாநிலம் கர்நாடகா. இதன் மூலம் வரும் 2029 ஆம் ஆண்டுக்குள் கர்நாடகாவில் 3.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என கர்நாடகா அரசு இலக்கண நிர்ணயம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications