பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் புதிய மசோதாவை எதிர்த்து தொழில்துறையினரும், முன்னணி நிறுவனங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் விரிவான ஆலோசனை, ஆய்வு நடத்தப்படும் என கர்நாடகா அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியாங்க் கார்கே இதுக்குறித்து கூறுகையில், இந்த மசோதாவின் விதிமுறைகள் குறித்து தொழில் நிபுணர்கள் மற்றும் பிற துறைகளின் கருத்துகளைக் கேட்டு அதன் பின்னர் மட்டுமே அமல்படுத்தப்படும் என முதல்வர் சித்தராமைய்யா-விடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதனால் யாரும் பீதி அடையத் தேவையில்லை, விரிவான ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்துக்கு வருவோம் என்று அமைச்சர் பிரியாங்க் கார்கே கூறினார். மேலும் மாநில அரசின் நோக்கம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதும் அதே நேரத்தில் முதலீடுகளை ஈர்ப்பதும் முக்கியம் என்பதை ஒப்புக்கொண்டார்.
இந்த மசோதா குறித்து அமைச்சரவை குழு, தொழில் துறை அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையுடன் எந்த விவாதமும் இல்லாமல் தொழிலாளர் துறையால் முன் வைக்கப்பட்டது. எனவே, முதல்வர் அவர்களிடம் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளோம். அதன் மூலம் எவ்வாறு உள்ளூர் மக்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்பதைத் தீர்மானிக்க உள்ளோம் என்றார் அமைச்சர் பிரியாங்க் கார்கே.
இதேபோல் கர்நாடக தொழில்துறையில் முக்கிய நபர்களாக விளங்கும் கிரன் மசூம்தார் ஷா மற்றும் மோகன்தாஸ் பாய் ஆகியோர் இந்த மசோதாவை எதிர்த்துள்ள நிலையில், அரசு அவர்களிடமும் ஆலோசனை செய்ய உள்ளோம் எனவும் பிரியாங்க் கார்கே தெரிவித்தார்.
கர்நாடகா மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ள மசோதாவில், கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் இருக்கும் நிர்வாக பணியிடங்களில் 50 சதவீதமும் மற்றும் நிர்வாகம் அல்லாத பணியிடங்களில் 75 சதவீத ஊழியர்களைக் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் கன்னடர்களுக்கு 100 சதவீத இட ஒதுக்கீட்டைக் கட்டாயமாக்கும் மசோதாவுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை அறிவித்தார். திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா X இல் பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு மசோதா குறித்து இன்போசிஸ் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரி மோகன்தாஸ் பாய் சற்று காட்டமாகவே காட்டினார். Mohandas Pai கூறுகையில் இந்த மசோதா இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறினார். இந்த மசோதா முதலில் நீக்கப்பட வேண்டும். இது ஒரு பாசிச மசோதா, இது போன்ற ஒரு மசோதாவைக் காங்கிரஸ் கொண்டு வர முடியும் என்று நம்பமுடியவில்லை என்றும்..
இந்த மசோதா படி ஒரு அரசு அதிகாரி தான் தனியார் துறையின் ஆட்சேர்ப்புக் குழுக்களில் அமர்வாரா? ஊழியர்கள் பணியில் சேரும் முன்பு மக்கள் மொழித் தேர்வை எழுத வேண்டுமா? என்ன இது என விரக்தியில் மோகன்தாஸ் பாய் கூறினார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications