தனியார் பள்ளிகளுக்கு கர்நாடக மாநில அரசு கெடுபிடி.. கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க உத்தரவு..

கர்நாடகாவில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு கர்நாடக மாநில அரசு மாணவர் சேர்க்கை தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி தனியார் பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிக்கையில் மாணவர் சேர்க்கை தொடர்பாக தனியார் பள்ளிகள் வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. ஏதேனும் விதிமுறைகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டால் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தனியார் பள்ளிகள் அவர்கள் பள்ளியில் அட்மிஷன் ஷெட்யூலை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் பொதுவெளியில் டிஸ்ப்ளே செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு கர்நாடக மாநில அரசு கெடுபிடி.. கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க உத்தரவு..

குறிப்பாக ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்படலாம், எந்த மொழியில் இங்கே பாடம் கற்பிக்கப்படுகிறது, குறிப்பிட்டு அந்த வகுப்புக்கான பள்ளி கட்டணம் எவ்வளவு என்பன உள்ளிட்ட விவரங்களை பள்ளியின் நோட்டீஸ் போர்டில் அனைவருக்கும் தெரியும்படி ஒட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவரத்தை பள்ளியின் இணையதளத்திலும் வெளியிட வேண்டுமென கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல கோ எஜுகேஷன் பள்ளிகளில் ஒரு வகுப்பில் 50 சதவீத இடம் மாணவிகளுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை 50 சதவீத இடங்களும் மாணவிகளை கொண்டு நிரப்ப முடியவில்லை என்றால் மட்டுமே அந்த மீதமுள்ள இடங்களுக்கு மாணவர்களை கொண்டு நிரப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்சி. எஸ்டி மற்றும் ஓபிசி ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு இடங்களை ரிசர்வ் செய்து வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த கல்வி ஆண்டுக்கான முழு கட்டண அமைப்பையும் பள்ளிகள் கட்டாயம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டணங்களை தாண்டி அந்த கல்வியாண்டு முடியும் வரை பள்ளிகள் கூடுதலாக எந்த ஒரு கட்டணத்தையும் வசூல் செய்யக்கூடாது என்றும் இந்த விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாணவர் சேர்க்கையின் போது பள்ளிகள் மாணவர்களையும் அவர்களுடைய பெற்றோர்களையும் அழைத்து நேர்காணல் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் மாநில அரசின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு தான் அட்மிஷன் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகங்கள் மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மையாகவும் நியாயத்துடனும் அனைவருக்கும் உள்ளடக்கிய ஒரு நடைமுறையும் பின்பற்ற வேண்டும் என்பதே இந்த விதிமுறைகளின் நோக்கம் என கர்நாடக மாநில அரசு கூறியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+