பெங்களூரு, கர்நாடகா: கர்நாடக மாநில அரசு அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சரான தினேஷ் குண்டு ராவ் இந்த சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார்.
கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த சூழலில் கர்நாடக மாநில அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான ஊதியங்களை உயர்த்தி அறிவிக்கை வெளியிட்டு இருக்கிறது. இந்த ஊதிய உயர்வானது Sick Newborn Care Units (SNCUs) மற்றும் Intensive Care Units (ICUs) ஆகிய பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவங்கள் மற்றும் செவிலியர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஊதியத்தின் படி எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்கள் மாதந்தோறும் 60,000 ரூபாயை சம்பளமாக பெறுவார்கள் இதற்கு முன் அவர்களுக்கு 46,000இல் இருந்து 50 ,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டது. அதேபோல சிறப்பு பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களின் மாத சம்பளம் 1.4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு இது 1.1 லட்சம் ஆக இருந்தது.
செவிலியர்களை பொறுத்தவரை அவர்களுக்கான மாத சம்பளம் இதற்கு முன்பு 18 ,000 ரூபாயாக இருந்தது தற்போது அது 22 ,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த ஊதிய உயர்வானது புதிதாக நியமனம் செய்யப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே நேஷனல் ஹெல்த் மிஷன் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் வேலையில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு புதிய ஊதியம் பொருந்தாது என்றும் அவர்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் விண்ணப்பம் செய்து பணிக்கு சேரும்போது இந்த புதிய ஊதிய உயர்வு அடிப்படையில் சம்பளம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பணியில் இருக்கும் ஊழியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டு மறு விண்ணப்பம் செய்யும்போது வேலைவாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அவர்களின் ஒவ்வொரு ஆண்டு பணி அனுபவத்திற்கும் இரண்டு மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்றும் கர்நாடக மாநில அரசு தெரிவித்திருக்கிறது. குறைந்த ஊதியம் இருப்பதால் பல்வேறு மருத்துவத் துறை சார்ந்த நிபுணர்களும் அரசு வேலைகளுக்கு விண்ணப்பம் செய்யாமல் தவிர்க்கின்றனர் இதன் காரணமாகவே கர்நாடகாவில் அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவி வந்தது இந்த சூழலில் தான் அரசு சம்பளத்தை உயர்த்தி இருக்கிறது என தினேஷ் குண்டு ராவ் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைக்கு கர்நாடக மாநில அரசு மருத்துவமனைகளில் 1398 எம்பிபிஎஸ் பணியிடங்கள் இருக்கின்றன இவற்றில் 579 இடங்கள் காலியாக இருக்கின்றன. சிறப்பு மருத்துவர் நிபுணர் பிரிவுகளில் 899 பதவி இடங்கள் இருக்கின்றன இதில் 350 இடங்கள் காலியாக இருக்கின்றன . செவிலியர்கள் பிரிவில் 9,041 பணியிடங்கள் உள்ளன அதில் 936 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications