கர்நாடக உயர் நீதிமன்றம் புதன்கிழமை வெளியிட்ட ஒரு முக்கியமான தீர்ப்பில், ஆப் அடிப்படையிலான ரைடு-ஹெய்லிங் சேவைகள் இம்மாநிலத்தில் பைக் டாக்ஸி சேவைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் ஓலா, உபர், ரேபிடோ தளங்களில் தற்போதைய சேவைகளை மொத்தமாக நிறுத்த ஆறு வார கால அவகாசத்தை கர்நாடக உயர் நீதிமன்றம் புதன்கிழமை கொடுத்து தீர்ப்பளித்தார்.
பெங்களூர் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பைக் டாக்சி சேவைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தீர்ப்பு அளித்திருப்பது இச்சேவையை பயன்படுத்துவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெங்களூர் போன்ற டிராபிக் அதிகமாக இருக்கும் நகரங்களிலும், டாக்சி சேவை கட்டணம் அதிகமாக இருக்கும் நகரங்களில் பைக் டாக்சி என்பது ஆபத்பாந்தவனாக இருந்து வருகிறது.

ஆனால் பைக் டாக்சி மூலம் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்து வரும் வேளையில் இந்த தீர்ப்பு இவர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இதேபோல் யூடியூப்-ல் பெங்களூர் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பைக் டாக்சி ஓட்டுனர்கள் மத்தியிலான வாக்குவதம் ஏற்படுத்தும் வீடியோ லட்சகணக்கில் உள்ளது.
நீதிபதி பி.எம். ஷியாம் பிரசாத் வழங்கிய இந்த தீர்ப்பு, ராபிடோ, உபர் மற்றும் ஓலா போன்ற முக்கிய நிறுவனங்கள் தாக்கல் செய்த பல்வேறு மனுக்களின் விசாரணையில் இருந்து வந்துள்ளது. இந்த நிறுவனங்கள் கர்நாடக உயர் நீதிமன்றமத்தில் பைக் டாக்சி சேவைக்கான உரிமையை வழங்கவும், பைக் டாக்ஸி சேவைகளை முறையான போக்குவரத்து நடவடிக்கைகளாக பதிவு செய்யவும் மாநில அரசை கட்டாயப்படுத்தக் மனுக்களை முன்வைத்தன.
இந்த மனுக்கள் மீதான விசாரணையில் தான் நீதிபதி பி.எம். ஷியாம் பிரசாத் கர்நாடக அரசு பைக் டாக்சி சேவைக்கான முறையான விதிமுறைகளை பிரிவு 93 மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் கொண்டு வரும் வரையில் பைக் டாக்சி சேவைகளை வழங்கக்கூடாது என்றும், 6 வாரத்திற்குள் தற்போது அளிக்கப்படும் சேவையை நிறுத்த நிறுவனங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் இத்தீர்ப்பின் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
ஜூலை 2021 இல் கர்நாடக மாநில அரசு வெளியிட்ட உத்தரவைத் எதிர்த்து டாக்சி சேவை நிறுவனக்கள் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தது. இப்போது இதுக்குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரையில் பைக் டாக்ஸி மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்க கூடாது என்ற கர்நாடக அரசுக்கு இடைக்கால உத்தரவிட்டது.
இந்த நிலையில் தான் இந்த மனுக்கள் மீதான விசாரணை வந்த நிலையில், புதன்கிழமை வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பு டாக்சி சேவை நிறுவனங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தீர்ப்பில் 2021ல் கொடுக்கப்பட்ட இடைக்கால நிவாரணத்தை ரத்து செய்த நீதிபதி ஷியாம் பிரசாத் இந்த தளங்கள் ஆறு வாரங்களுக்குள் தங்கள் பைக் டாக்ஸி சேவைகளை நிறுத்த வேண்டும் என்றும், இந்த காலக்கெடுவிற்கு அப்பால் அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக நிறுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் நீதிபதி மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் பிரிவு 93 இன் படி, பைக் டாக்ஸி சேவைகளை நிர்வகிக்கும் பொருத்தமான விதிமுறைகளை பரிசீலிக்கவும் உருவாக்கவும் நீதிமன்றம் மாநில அரசுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கியது.
போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி, நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றார், ஒழுங்குபடுத்தப்படாத இந்த ஆப் அடிப்படையிலான பைக் டாக்சி சேவைகள் தொடர்புடைய பாதுகாப்பு கவலைகளை வலியுறுத்தினார். இதேவேளையில் டாக்சி நிறுவனங்கள் இந்த தீர்ப்பை எதிர்த்தும் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications