கர்நாடகா அரசு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் டீசல் மீதான விற்பனை வரியை 3 சதவீதம் உயர்த்தியதை அடுத்து, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் டீசல் விலை அதிகரிக்க உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக, அம்மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, மீதான விற்பனை வரி 18.4 சதவீதத்திலிருந்து 21.17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கர்நாடகாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.88.99 ஆகவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.92 ஆகவும் உள்ளது. அகில கர்நாடக பெட்ரோலியம் டீலர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.2 அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த விலை மாற்றங்கள் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது பற்றிய தகவல்கள் தற்போது இல்லை.

இந்தநிலையில், விற்பனை வரி உயர்வுக்குப் பிறகும், கர்நாடகாவில் டீசல் விலை தென்னிந்தியாவிலேயே மிகவும் மலிவானது என்று கர்நாடக முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் எல்.கே. அதீக் கூறியுள்ளார். மேலும், டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்துவதால் சுமார் ரூ. 2,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மீதான விற்பனை வரியை உயர்த்துவதற்கான எந்த திட்டமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஏப்ரல் 1 முதல் வரி விகிதம் 21.17 சதவீதமாக உயர்ந்து, விலை ரூ.2 அதிகரித்து ரூ.91.02 ஆக இருக்கும் என்று கர்நாடக அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31 நிலவரப்படி, டீசல் விலை லிட்டருக்கு பெங்களூருவில் (கர்நாடகா) ரூ.89.02 ஆகவும், ஓசூரில் (தமிழ்நாடு) ரூ.94.42 ஆகவும், காசர்கோட்டில் (கேரளா) ரூ.95.66 ஆகவும், அனந்தபூரில் (ஆந்திரப் பிரதேசம்) ரூ.97.35 ஆகவும், ஹைதராபாத்தில் (தெலுங்கானா) ரூ.95.70 ஆகவும், காகலில் (மகாராஷ்டிரா) ரூ.91.07 ஆகவும் உள்ளது.
டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கும், இதன் தாக்கம் நேரடியாக மக்களுக்கே ஏற்படும். அதனால், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும். ஏற்கனவே வாழ்க்கை செலவு உயர்ந்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு பொதுமக்கள் மீது கூடுதல் சுமையாக அமையும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக கர்நாடக அரசு, ஜூன் 2024 இல், பெட்ரோல் மீதான விற்பனை வரியை 25.92 சதவீதத்திலிருந்து 29.84 சதவீதமாகவும், டீசல் மீதான விற்பனை வரியை 14.3 சதவீதத்திலிருந்து 18.4 சதவீதமாகவும் உயர்த்தியது, இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு முறையே ரூ.3 மற்றும் ரூ.3.02 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு தொடர்ச்சியான விலை உயர்வுகளால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக, பெங்களூரு மாநகராட்சி (BBMP) ஏப்ரல் 1 முதல் வீடுகளிலிருந்து சொத்துவரியுடன் இணைந்து திடக்கழிவு மேலாண்மை கட்டணத்தையும் வசூலிக்க முடிவு செய்துள்ளது. இதுமட்டுமல்லாமல், சமீபத்திய பிற கட்டண உயர்வுகளில், பேருந்து கட்டணம் 15 சதவீதம் உயர்வு, மெட்ரோ கட்டணத்தில் 71 சதவீதம் வரை உயர்வு, பால் விலையில் லிட்டருக்கு ரூ.4 உயர்வு மற்றும் மின்சார கட்டணங்கள் அதிகரிப்பு ஆகியவை அடங்கும். அதே சமயம், நிலையான கட்டணங்கள் 2025-26ல் ரூ.25, 2026-27ல் ரூ.30 மற்றும் 2027-28ல் ரூ.40 உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வுகள், செலவை மேலும் உயர்த்தும் என்பதால், மக்கள் பெரும் பொருளாதார சுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications