இந்தியாவின் முக்கிய வர்த்தக மாநிலமாகவும், வேலைவாய்ப்பு, வரி பங்கீடு என அனைத்திலும் முன்னிலையில் இருக்கும் கர்நாடகா முந்தைய ஆட்சியில் புதிய வர்த்தகத்தை கைப்பற்றுவதில் மந்தநிலையை எதிர்கொண்டு வந்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பின்பு தனது அதிரடி ஆட்டத்தை துவங்கியுள்ளது.
கர்நாடக அரசு அடுத்தடுத்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வரும் வேளையில் இந்தியாவுக்கு மிகவும் அவசியமான பேட்டரி தொழிற்சாலையை அமைக்கும் 8000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இன்டர்நேஷ்னல் பேட்டரி கம்பெனி-யிடம் (IBC) இருந்து பெற ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வரையில் அனைத்தையும் தயாரித்து ஏற்றுமதி செய்து வரும் வேளையில் பேட்டரி தொழிற்சாலை மிகவும் முக்கியமானதாக இருக்கும் வேளையில், இத்துறையில் கர்நாடகா ஒரு படி முன்னேறியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டீல் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், சர்வதேச பேட்டரி நிறுவனம் (ஐபிசி) பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையை உருவாக்க மாநில அரசுடன் சுமார் 8000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என தெரிவித்தார்.
எம்பி பாட்டீல் தனது பதவில் இந்த IBC-யின் இந்த பேட்டரி தொழிற்சாலை 100 ஏக்கரில் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த தொழிற்சாலை 2025 ஆம் ஆண்டுக்குள் தனது உற்பத்தி பணிகளை துவங்க உள்ளது. மேலும் இந்த தொழிற்சாலை 2028 ஆம் ஆண்டுக்குள் 10 ஜிகாவாட் திறன் கொண்டதாக இருக்கும் எனவும் கர்நாடக மாநிலத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை கமிஷ்னர் குன்ஜன் கிருஷ்ணா தெரிவித்தார்.

ஜூன் மாதத்தில் IBC நிறுவனம் கர்நாடகாவில் பேட்டரி தொழிற்சாலை அமைக்க விருப்பம் தெரிவித்த நிலையில், தற்போது இது நடைமுறைக்கு கொண்டுவர ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் கர்நாடகா மாநிலம் சுமார் 11,505 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியை வசூலித்துள்ளது. இந்திய அளவில் ஜிஎஸ்டி வரி வசூலில் 2வது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications