பெங்களூருவில் தற்போது கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் பயணிகள் வருகையும் சரக்குகள் கையாளும் திறனும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எனவே பெங்களூரு நகருக்கு இரண்டாவதாக ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதில் கர்நாடக மாநில அரசு மிக தீவிரமாக இருக்கிறது.
கர்நாடக மாநில அரசு பெங்களூரு இரண்டாவது விமான நிலைய திட்டத்துக்காக மூன்று இடங்களை தேர்வு செய்து ஆய்வு நடத்தியது. ஒன்று கனகபுரா சாலையிலும் ,மற்றொன்று தெற்கு பெங்களூருவின் ஹாரோஹல்லி பகுதியிலும் இருக்கிறது. மூன்றாவது இடம் சிக்கசொலூர் என்ற இடத்தில் உள்ளது. இந்திய விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் இந்த மூன்று இடங்களிலும் ஆய்வு செய்தனர். அப்போது சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். சுற்றுச்சூழல் தாக்கம், விமானம் ஏறி இறங்குவதில் சிக்கல் உள்ளிட்ட அனைத்தையும் கவனிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.'

இந்த சூழலில் கர்நாடக மாநில அரசு தெற்கு பெங்களூருவில் இருக்கும் இடத்தில் தான் விமான நிலையத்தை அமைக்க ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் ஓசூர் விமான நிலைய திட்டம் தான். தமிழ்நாடு பெங்களூரு எல்லையில் அமைந்திருக்கக்கூடிய ஓசூர் நகரில் சர்வதேச விமான நிலையத்தை கொண்டு வருவதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருக்கிறது .
ஓசூர் நகரம் உற்பத்தி ரீதியாகவும் தொழில்துறை ரீதியாகவும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பெங்களுருக்கு அருகிலேயே இருப்பதன் காரணமாக ஓசூரில் விமான நிலையம் அமைப்பது ஓசூர் நகர வளர்ச்சிக்கு மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என தமிழ்நாடு அரசு கருதுகிறது. இதற்காக ஓசூர் விமான நிலைய இடம் தேர்வு, ஆய்வு உள்ளிட்ட பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறது .

ஓசூரில் விமான நிலையம் அமைந்துவிட்டால் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை விட பெங்களுருவை சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் அந்த விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள். ஏனென்றால் ஓசூர் விமான நிலையம் தெற்கு பெங்களூர் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு குறுகிய நேரத்தில் பயணம் செய்யும் தொலைவில் தான் இருக்கும். எனவே கெம்பக்வுடா சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லாமல் பல்வேறு பயணிகளும் ஓசூர் விமான நிலையத்தை பயன்படுத்த தொடங்குவார்கள் .
தெற்கு பெங்களூரில் செயல்படக்கூடிய பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஏற்றுமதி இறக்குமதிகளுக்கு இந்த விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளும். இத்தகைய சூழலில் தான் கர்நாடக மாநில அரசு தெற்கு பெங்களூருவில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க திட்டமிடுகிறதாம்.
அப்படி அமைத்துவிட்டால் தெற்கு பெங்களூரு மக்களும் , நிறுவனங்களும் ஓசூர் விமான நிலையத்தை நாடாமல் பெங்களூருவின் இரண்டாவது விமான நிலையத்தையே பயன்படுத்துவார்கள். ஆனால் இது நடைமுறையில் எளிதான காரியம் இல்லை. கர்நாடகா அரசு இடத்தை தேர்வு செய்து ஆய்வு நடத்தி மத்திய அரசு, விமான போக்குவரத்து துறை ஆணையம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றின் அனுமதியை பெற வேண்டும். தமிழ்நாடு அரசு ஓசூர் விமான நிலைய பணிகளை வேகப்படுத்தி வரும் சூழலில் பணிகள் தொடங்கி விட்டால் கர்நாடக அரசுக்கு சிக்கல் உண்டாகும்.
More From GoodReturns

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications