பெங்களூரு, கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் வேலை நேரத்தை 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்துவதற்க்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தொழிலாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
10 மணி நேரம் வேலை: இந்தியாவில் ஏற்கனவே உத்திர பிரதேசம், குஜராத் ,சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் எல்லாம் 10 மணி நேர வேலை அமலில் இருக்கிறது. கடந்த வாரம் தான் ஆந்திர மாநில அரசு தங்கள் மாநிலத்தில் ஊழியர்களுக்கான வேலை நேரத்தை 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்துகிறோம் என அறிவிப்பு வெளியிட்டது. இந்த சூழலில் கர்நாடக மாநில தொழில் துறை 18 ஆம் தேதி அன்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பணி நேரத்தை 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்துவதற்கு முடிவு செய்து இருப்பதாக கூறியது.

சட்டத்திருத்தம்: கர்நாடகாவில் தற்போது 9 மணி நேர வேலை திட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை 10 மணி நேரமாக உயர்த்துவது என அந்தக் கூட்டத்தில் கர்நாடக மாநில தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இது தொடர்பாக மாநிலத்தின் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஒருநாளைக்கு 12 மணி நேரம் வேலை: இந்த சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தால் கர்நாடக மாநிலத்தில் வேலை நேரம் 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்தப்படும். அது மட்டும் இன்றி ஓவர் டைம் எனப்படும் கூடுதல் நேரத்தோடு ஒரு நாளைக்கு ஒரு ஊழியர் 10 மணி நேரம் வரை மட்டும் வேலை செய்யலாம் என தற்போது இருக்கிறது, அதனை 12 மணி நேரமாக உயர்த்தும் வகையிலும் மாற்றம் கொண்டு வர இருப்பதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு: தற்போதைக்கு ஒரு ஊழியர் மூன்று மாதங்களுக்கு 50 மணி நேரங்கள் மட்டுமே ஓவர் டைம் பார்க்க முடியும் என்ற விதிமுறை அமலில் இருக்கிறது இதனை 144 மணி நேரங்களாக உயர்த்த இந்த சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது. கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு கர்நாடக மாநில ஐடி ஊழியர்களுக்கான சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஊழியர்களின் தனிப்பட்ட உரிமைகள் மீதான தாக்குதல் இது என குறிப்பிட்டுள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கை இல்லையா?: ஊழியர்கள் தங்களுக்கு என தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமையை பறிக்கும் வகையில் இந்த வேலை நேர நீட்டிப்பு இருப்பதாக ஐடி ஊழியர்கள் சங்கம் சாட்டியுள்ளது. ஒரு நபர் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்க்கலாம் என அரசு கூறுகிறது, இது நடைமுறைக்கு வந்தால் தற்போது இருக்கக்கூடிய மூன்று ஷிப்ட் நடைமுறை என்பது இரண்டாக குறையும். இதன் மூலம் பல்வேறு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என கூறியிருக்கிறது.
மனநலனுக்கு பெரிய ஆபத்து: கடந்த 2024 ஆம் ஆண்டு கர்நாடக மக்களின் மனநலன் தொடர்பான ஒரு அறிக்கையை அரசே வெளியிட்டிருந்தது. அதனை சுட்டிக்காட்டிருக்கும் ஐடி ஊழியர்கள் சங்கம் , இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய 90 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் குறிப்பாக 25 வயது உட்பட்டவர்கள் ஏற்கனவே பல்வேறு மன அழுத்தங்களில் தவிக்கின்றனர் என அந்த அறிக்கையில் கூறி இருந்ததை எடுத்துரைக்கின்றனர். இத்துடன் பணி நேரத்தை நீட்டிப்பது அவர்களின் மன நலனுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும் என கூறியுள்ளனர்.
உலகத்தை கவனியுங்க: பணி அழுத்தம் காரணமாக அண்மையில் ஓலா நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒரு மென்பொருள் பொறியாளர் தற்கொலை செய்து கொண்டதையும் ஐடி ஊழியர்கள் சங்கம் குறிப்பிட்டு இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபங்களை மட்டுமே கருத்தில் கொண்டு பணி நேர நீட்டிப்பு என்ற நடவடிக்கையை அரசு எடுத்து இருப்பதாக ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியிருக்கிறது. உலக அளவில் பல்வேறு நாடுகளும் வேலை நாட்களையே குறைத்து வரக்கூடிய நிலையில் அதற்கு மாறாக கர்நாடகா அரசு வேலை நேரத்தை அதிகரிக்கும் முடிவு நியாயமற்றது என ஐடி ஊழியர்கள் சங்கம் குறிப்பிட்டு இருக்கிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications