கர்நாடகாவில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடு செய்வதற்கான கர்நாடக அரசின் முடிவை, பிரபல தொழில்துறை தலைவர்களும், தொழிலதிபர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும் இது மக்கள் மத்தியில் பாரபட்சம் காட்டும் விதமாக உள்ளது, அதை உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதில் முக்கியமாக பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மசூம்தார் ஷா, கர்நாடக அரசின் இந்த புதிய மசோதாவை நடைமுறைப்படுவதில், நாட்டின் தொழில்நுட்ப மையமாகப் பெங்களூர் விளங்குவதை எந்த நிலையிலும் பாதிக்கக் கூடாது என்று சமூகவலைத்தள பதிவு வாயிலாகக் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் தொழில்நுட்ப மையமாகப் பெங்களூர் விளங்கும் வேளையில், நாடு முழுவதும் இருக்கும் திறமையான ஊழியர்கள் இத்துறை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும். இந்த கொள்கை மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதே முக்கிய நோக்கமாக இருந்தாலும், இந்த நடவடிக்கையால் தொழில்நுட்ப துறையில் முன்னிலையில் இருக்கும் நிலையைப் பாதிக்கக் கூடும். எனவே இந்த கொள்கையில் உயர் திறன் கொண்ட பிரிவு அல்லது பணிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர் கூறினார்.
கர்நாடகாவில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு மசோதா குறித்த கருத்தைஇன்போசிஸ் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியும், ஆரின் கேப்பிடல பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆற இருக்கும் மோகன்தாஸ் பாய் சற்று காட்டமாகவே காட்டினார்.
Mohandas Pai கூறுகையில் இந்த மசோதா இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறினார். இந்த மசோதா முதலில் நீக்கப்பட வேண்டும். இது பாரபட்சமானது, பிற்போக்குத்தனமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
இது ஒரு பாசிச மசோதா, இது போன்ற ஒரு மசோதாவைக் காங்கிரஸ் கொண்டு வர முடியும் என்று நம்பமுடியவில்லை என்றும், இந்த மசோதா படி ஒரு அரசு அதிகாரி தான் தனியார் துறையின் ஆட்சேர்ப்புக் குழுக்களில் அமர்வாரா? ஊழியர்கள் பணியில் சேரும் முன்பு மக்கள் மொழித் தேர்வை எழுத வேண்டுமா? என்ன இது என விரக்தியில் மோகன்தாஸ் பாய் கூறினார்.
இதேபோல் ASSOCHAM கர்நாடகா-வின் இணைத் தலைவரும், YULU இன் இணை நிறுவனருமான RK மிஸ்ரா, இந்த மசோதா குறுகிய நோக்குடையது என்றும், இந்த மசோதா-வை செயல்படுத்தும் பொருட்டு இதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க ஒவ்வொரு தனியார் நிறுவனத்திலும் ஒரு அரசு அதிகாரியை நியமித்தால், அது இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் GCC நிறுவனங்களைப் பயமுறுத்துவதாக இருக்கும் என்றும் கூறினார்.
இதை கர்நாடகா அரசிடமிருந்து மற்றொரு மேதாவித்தனமான நடவடிக்கை என்று காட்டமாக எக்ஸ் தளத்தில் RK மிஸ்ரா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications