பெங்களூர்: ஏப்ரல் மாதம், 2023 ஆம் ஆண்டில் சுமார் 38.6 லட்சம் பீர் பாக்ஸ்கள் விற்பனையாகியுள்ளன. அதே சமயம் 2024 ஆம் ஆண்டின், ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 23.5 லட்சம் பீர் பாக்ஸ்கள் விற்கப்பட்டுள்ளன. அதிக வெப்பநிலையின் காரணமாக கர்நாடகாவிலும், பெங்களூரிலும் அதிக அளவிலான பீர்பாட்டில்கள் விற்பனையாகியுள்ளன, என்று டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கலால் துறையில் மூத்த அதிகாரி ஒருவர் கர்நாடகா மாநிலத்தில் அதிகரித்து வரும் வெப்ப நிலை காரணமாக, 23.5 லட்சம் பீர் பெட்டிகள் விற்பனையானது என கூறியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இந்த கோடையில் அதிக வெப்ப அலைகள் வீசும் என இம்மாதத்தின் முதல் வாரத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்ததை அடுத்து, இந்த பீர் விற்பனை அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முழுவதுமாக பதிவு செய்யப்பட்ட மொத்த பீர் விற்பனையில் கர்நாடகா மாநிலம் 61 சதவீதத்தை எட்டியுள்ளது என்று கலால் துறையிலிருந்து வந்த தரவுகள் தெரிவிக்கின்றன. கலால் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, கடந்த ஏப்ரலில், 38.6 லட்சம் பீர் பெட்டிகள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு, மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், 23.5 லட்சம் பெட்டிகள் விற்பனையாகியுள்ளன.
மேலும், இந்த தரவுகளை உன்னிப்பாக ஆராய்ந்தால், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பீர் விற்பனை உயர்ந்து வருகிறது என்பது தெளிவாகிறது. பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரு மாதங்களில் விற்பனையான பீர்கள் முந்தைய ஆண்டை விட அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த கோடையில், கலால் துறை விற்பனை 30% அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் பீர் தேவைக்கு ஏற்றவாறு போதுமான அளவு இருப்பு உள்ளதாக கலால் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
கோடையில், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பலரின் விருப்பமான பானமாக பீர் இருக்கிறது. வெப்பநிலை அதிகரிக்கும் போது, பீர் நுகர்வு அதிகரிக்கிறது. ஒரே நேரத்தில் நடந்த மக்களவைத் தேர்தல்கள் இந்த பீர் விற்பனையை அதிகரித்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குளிரூட்டப்பட்ட பீர் விரும்பத்தக்க தேர்வாக இருப்பதாக கூறப்படுகிறது, இது வெப்பத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது என்று மக்கள் நம்புகின்றனர்.
ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டில் கடுமையான வெப்பம் நிலவும் என்றும், மத்திய மற்றும் மேற்கு தீபகற்ப பகுதிகள் மிக மோசமான பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை மையம் கூறியிருந்தது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இருக்கும், தென்னிந்தியாவில் அதிக வெப்பம் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications