பசுமையான மற்றும் அமைதியான கிராமப்புறங்களில் வாழ வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. பணம் ஈட்டுவதற்காக கிராமப்புறங்களில் உள்ள மக்களும் தங்களுடைய அமைதியான சூழலை விடுத்து வேறு நகரங்களுக்கு சென்று வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள கடப்பாவில் பசுமையான வயல்வெளிகள் மற்றும் அசையும் தென்னை மரங்களுக்கு நடுவில் மங்குஸ்தான் மற்றும் ரம்புட்டான் பழங்களை விளைவித்து ஒருவர் ஆண்டு வருமானமாக ரூ.1 கோடி ரூபாய் ஈட்டி வருகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
42 வயதான லோஹித் ஷெட்டி விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தனது தந்தை மற்றும் மாமாக்கள் சேர்ந்து 21 ஏக்கர் நிலத்தில் ரப்பர், தேங்காய், பாக்கு, முந்திரி ஆகியவற்றை பயிரிடுவதை பார்த்தே வளர்ந்தவர். சிறுவயதில் பெரிய ஆசைகள் இருந்த போதிலும் நிதி சிக்கல்கள் காரணமாக 10-ஆம் வகுப்புக்கு பிறகு அவர் கல்வியை தொடரவில்லை. அதன் பிறகு தனது குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வழிகளைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தியுள்ளார் லோஹித்.

முதலில் ஒரு சிறிய கடை மற்றும் உணவகம் உட்பட பல்வேறு வணிகங்களில் வணிகங்களை செய்ய முயற்சித்துள்ளார். ஒரு பண்ணையில் வேலை செய்ய தர்மஸ்தலாவுக்கு சென்றுள்ளார். ஆனாலும் லோஹித் தனது குடும்பத்தை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார். அதற்காக ஒரு கல் குவாரியிலும் வேலைக்குச் சேர்ந்தார்.
பிறகு சுமார் 10 ஆண்டுகள் லோஹித் சொந்த ஊரிலிருந்து 1 மணி நேரம் பயணம் செய்து தர்மஸ்தலாவில் உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்தார், அங்கு ரம்புட்டான், டிராகன் பழம் மற்றும் மங்குஸ்தான் போன்ற அயல்நாட்டு பழங்களை பயிரிடுவதற்கான பயிற்சி அவருக்கு கிடைத்தது. முற்போக்கான விவசாய நடைமுறைகள் மற்றும் விவசாயத்தை லாபகரமான முயற்சியாக மாற்றுவதற்கான புதிய முறைகளை தெரிந்து கொண்டார்.
தான் 10 வருடங்களாக ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் வளர்ந்த தோட்டத்தில் வேலை செய்திருப்பதாகவும், அவை எங்கிருந்து வருகின்றன? அவற்றின் வளர்ச்சிக்கான சிறந்த சூழல் என்ன என்பதை பற்றி தனக்கு ஒரு யோசனை கிடைத்ததாகவும் லோஹித் கூறியுள்ளார்.
2016-ஆம் ஆண்டில் அனைத்தையும் கற்றுக்கொண்டு வீடு திரும்பிய பிறகு பல வருட கடின உழைப்பின் மூலம் தனது நிபுணத்துவத்தை லாபகரமான தொழிலாக மாற்ற லோஹித் முடிவு செய்தார். அவர் வீட்டிற்கு வந்தபோது ஒரு கொத்து ரம்புட்டான், மங்குஸ்தான் மற்றும் டிராகன் பழ விதைகளை கொண்டு வந்திருந்தார்.
20 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து இந்த பழங்களை விளைவிப்பதற்கான முயற்சியை தொடங்கினார். ஏற்கனவே அவருடைய குடும்பத்துக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து அவர் 41 ஏக்கர் நிலத்தில் தனது விவசாயத்தை தொடங்கினார். கேரளாவில் உள்ள ஒரு நர்சரியில் இருந்து அதிக தாவரங்களை பெற்று அடுத்த 8 ஆண்டுகளில் லோஹித் தனது நிலத்தில் பழங்களை வளர்க்கத் தொடங்கினார்.
இன்று லோஹித் பயிர்கள் மற்றும் காய்கறிகளை வளர்ப்பதில் ஆர்வமுள்ள மக்களுக்கும் உதவி வருகிறார். அவருடைய இந்த முயற்சிகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 கோடிக்கும் மேல் சம்பாதிக்கிறார்.
ரம்புட்டான், மங்குஸ்தான் மற்றும் டிராகன் பழம் போன்ற பழங்கள் பொதுவாக கேரளாவில் விளைகின்றன, மேலும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன, இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. இருப்பினும் சரியான பருவ நிலை இல்லாமல் இருந்தால் இந்த பயிர்கள் விளைவிப்பதில் தோல்வி ஏற்படலாம். மற்ற தாவரங்களைப் போலவே நீர், சூரிய ஒளி மற்றும் நிழல் ஆகியவை இந்த தாவரத்திற்கும் முக்கியம்.
இந்த செடிகள் முதன்முதலில் நடவு செய்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல மகசூல் தரும். ஒரு ரம்புட்டான் செடி ஆண்டுக்கு 45 கிலோ உற்பத்தி செய்கிறது, அதே சமயம் ஒரு டிராகன் பழச் செடி ஆண்டுக்கு சுமார் 300 பழங்களைத் தருகிறது.
லோஹித், 12 ஏக்கர் நிலத்தில் ரம்புட்டானை வளர்த்து, 500 டிராகன் பழச் செடிகளை வைத்துள்ளார், ரம்புட்டான் கிலோ ரூ.180 முதல் ரூ.300 வரையிலும், மங்குஸ்தான் கிலோ ரூ.350 முதல் ரூ.750 வரையிலும், டிராகன்ஃப்ரூட் கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரையிலும் விற்பனை செய்கிறார்.
இந்தப் பழங்களை வளர்பதற்கு லோஹித் மாட்டு சாணம், வெப்பம் புண்ணாக்கு போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு செடிக்கும் சரியான அளவு தண்ணீர் மற்றும் உரம் வழங்குவதை உறுதி செய்ய சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்துகிறார்.
தனது பண்ணைக்கு நேரடியாக வந்து பழங்களை வாங்குவதைத் தவிர, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கோயம்புத்தூர், மும்பை மற்றும் கேரளா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் அவர் சப்ளை செய்கிறார்.
சாதிப்பதற்கு கல்வி ஒரு தடை இல்லை என்பதை லோஹித் நிரூபித்துள்ளார். பத்தாம் வகுப்போடு தனது படிப்பை நிறுத்தினாலும், இன்று ரூ.1 கோடி வரை சம்பாதித்து அசத்தி வருகிறார். இது போன்ற பயிர்கள் பருவ காலநிலை, மண் வகை போன்றவற்றை பொருத்துதான் வளரும். ஆனாலும் இதை தனது தோட்டத்தில் பயிரிட்டு தற்போது அதன் மூலம் நல்ல லாபம் ஈட்டி வருகிறார் இந்த சாதனை மனிதர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications