பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் சம்பளத்தை 100% உயர்த்துவதற்கு மாநில அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் தற்போது முதலமைச்சருக்கு 75,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. அமைச்சர்களுக்கு மாதம்தோறும் 60,000 ரூபாயும் , எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிகளுக்கு 40,000 ரூபாயும் என சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை 100 சதவீதம் உயர்த்துவதற்கு கர்நாடக மாநில அரசு அனுமதி தந்துள்ளது. இதன் மூலம் முதலமைச்சரின் சம்பளம் 1.5 லட்சம் ரூபாயாகவும், அமைச்சர்களின் சம்பளம் 1.20 லட்சம் ரூபாயாகவும் உயரும். எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிக்களின் சம்பளம் 80 ஆயிரம் ரூபாயாக உயரும் என சொல்லப்படுகிறது.

இந்த சம்பள உயர்வின் மூலம் இவர்களுக்கு வழங்கப்படும் டிராவல் அலவன்ஸ் ஒரு மாதத்திற்கு 2.5 லட்சத்தில் இருந்து 3.5 லட்சம் ரூபாயாக உயரும். டெலிபோன் கட்டணங்கள் மற்றும் பிற செலவினங்களுக்கு வழங்கப்படும் தொகையானது 85,000இல் இருந்து 1.10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். இந்த சம்பள உயர்வு தொடர்பாக கர்நாடக மாநில அரசு இரண்டு மசோதாக்களை சட்டப்பேரவையின் இரண்டு அவைகளிலும் தாக்கல் செய்ய இருக்கிறது.
இந்த மசோதா நிறைவேற்றப்படும் போது முதலமைச்சர், எம்எல்ஏக்கள் மட்டுமில்லாமல் ஓய்வு பெற்ற எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிகளுக்கான ஓய்வூதிய தொகை 50,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக உயரும். சபாநாயகரின் சம்பளம் 75,000 ரூபாயிலிருந்து 1.25 லட்சம் ரூபாயாக உயரும். இதனிடையே கர்நாடக மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.
மாநில நிதி நிலைமை சீராக இல்லாத நிலையில் 100 சதவீத சம்பள உயர்வு அவசியம் தானா என கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா சாதாரண மக்களைப் போலவே தங்களுக்கும் செலவினங்கள் அதிகரிப்பதே ஊதிய உயர்வுக்கு காரணம் எனக் கூறியுள்ளார் பல்வேறு எம்எல்ஏக்களிடம் இருந்து வந்த பரிந்துரைகளை ஏற்று தான் முதலமைச்சர் இந்த முடிவினை எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.
கர்நாடக மாநில அமைச்சர் எம்.பி. பாட்டில் சுதந்திரமாக அமைக்கப்பட்ட ஒரு குழுவின் பரிந்துரையை ஏற்று தான் முதலமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களுக்கான சம்பளத்தை உயர்த்துவதாக தெரிவித்துள்ளார். அதிக சம்பளம் கிடைக்கும் போது எம்எல்ஏக்கள் ஊழலில் ஈடுபடுவது குறையும் என்ற வாதத்தையும் அவர் முன் வைத்துள்ளார். இந்த சம்பள உயர்வை நாங்களாகவே முடிவு செய்து கொள்ளவில்லை, சுதந்திரமாக ஒரு கமிட்டி அமைத்து அந்த கமிட்டியின் பரிந்துரையின் பெயரில் தான் முடிவினை எடுத்தோம் என விளக்கம் தந்துள்ளார்.
இதனிடையே ஆளும் காங்கிரஸ் எம்பி ரங்கநாத் இந்த நூறு சதவீத சம்பள உயர்வு என்பதில் தனக்கு விருப்பமில்லை எனக் கூறியுள்ளார். 10 லிருந்து 20 சதவீதத்திற்கு மேல் உயர்வு இருந்தாலே போதும் என்ற கருத்தை அவர் முன் வைத்திருக்கிறார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications