பெங்களூரு: கர்நாடகாவில் மகளிருக்கு 2000 ரூபாய் உரிமை தொகையை கொடுப்பது போலவே ஆண்களுக்கு வாரத்திற்கு இரண்டு மதுபாட்டில்களை இலவசமாக வழங்குங்கள் என எம்எல்ஏ ஒருவர் கூறியது பெரும் விவாதமாக மாறியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. சித்தராமையா முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 36,500 கோடி ரூபாய் கலால் வரியாக வசூல் செய்யப்படுகிறது அதனை இந்த நிதியாண்டு முதல் 40,000 கோடியாக உயர்ந்த அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கர்நாடக மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் எம் டி கிருஷ்ணப்பா கலந்துகொண்டு பேசினார். அப்போது கடந்த ஒரு ஆண்டில் கலால் வரியை அரசு மூன்று முறை உயர்த்தி உள்ளது என குறிப்பிட்டார். இதனால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். வரியை உயர்த்தாமல் 40,000 கோடி ரூபாய் என்ற இலக்கை எப்படி அரசால் எட்ட முடியும் என கேள்வி எழுப்பிய அவர் சாதாரண மக்களையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
கலால் வரியை உயர்த்தி விட்டு மகளிருக்கு 2,000 ரூபாய் உதவித்தொகை தந்துவிட்டால் சரியாகிவிடுமா என்ற கேள்வியை முன்வைத்தார். கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் பல நல திட்டங்களையும் அவர் அப்போது குறிப்பிட்டு பேசினார்.
மகளிருக்கு 2000 ரூபாய் உதவித்தொகை, இலவச பேருந்து பயணம் மற்றும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என பல்வேறு திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. இது அனைத்தும் மக்களின் வரிப்பணம் தான் என குறிப்பிட்ட அவர், பெண்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை வழங்குவது போல ஆண்களுக்கு வாரத்திற்கு இரண்டு மது பாட்டில்களை வழங்குங்கள் அவர்கள் குடிக்கட்டும் என தெரிவித்தார்.
கிருஷ்ணப்பாவின் இந்த பேச்சால் ஒரு நிமிடம் சட்டப்பேரவையே சிரிப்பலையில் மூழ்கியது. இதனிடையே கிருஷ்ணப்பாவின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ் அரசு மது குடிக்கும் பழக்கத்தை குறைப்பதை நோக்கமாக கொண்டுதான் செயல்படுகிறது என்றும் நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு இதனை செய்யுங்கள் என்றும் கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் இரண்டு பாட்டில்களை கொடுக்காமலேயே நாம் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறோம், வாரத்திற்கு இலவசமாக இரண்டு மது பாட்டில்களை கொடுத்தால் என்ன ஆகும் என கேள்வி எழுப்பினார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications