கர்நாடகா மாநிலத்தில் இருந்து இஸ்ரேலுக்கு வேலை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கு முக்கியமான காரணம் 2023 ஆம் ஆண்டில் இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனைக்கு பின்பு இஸ்ரேல் அரசு நேரடியாக தலையிட்டு இந்தியாவில் இருந்து மக்களை பல்வேறு பணியில் அமர்த்தும் முயற்சிகளை மேற்கொண்டது.
இஸ்ரேல் அரசு கட்டுமானம் மற்றும் சுகாதாரத் துறைகளில் திறமையான தொழிலாளர்களை நியமிக்க இந்தியாவை அணுகியது. தற்போது 2ஆம் சுற்று பணி தேர்வுக்கான செயல்பாடுகள் துவங்கியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் இந்தியர்களின் தேவை அதிமாகியுள்ள காரணத்தால், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்ல கட்டாயமான ஆவணங்களில் ஓன்றான PCC என அழைக்கப்படும் போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிரேட் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளது மூலம் கர்நாடகா மாநிலத்தில் இருந்து இஸ்ரேலுக்கு வேலை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு ரீஜினல் பாஸ்போர்ட் அலுவலர் (RPO) கிருஷ்ணா கே கூறுகையில், இஸ்ரேலில் வேலை செய்ய விரும்பும் கர்நாடக மக்களுக்கு இந்த ஆண்டு இதுவரை சுமார் 2,200 போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிரேட் வழங்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டில் 1,576 போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிரேட் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் கடந்த ஆண்டு அதிகரித்ததையடுத்து, இஸ்ரேல் நாட்டில் இருந்த பாலஸ்தீன மக்களை வெளியேற்றப்பட்டனர். இதனால் பல பணிகளை செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் இந்தியாவில் இருந்து ஊழியர்களை பணியில் சேர்க்க திட்டமிட்டதால் தற்போது PCCகளுக்கான தேவை அதிகரித்தது.
இங்கிலாந்து கர்நாடக மாநில தொழிலாளர்களுக்கு பிரபலமான இலக்காக இருந்தாலும், இங்கிலாந்து செல்ல விரும்பும் நபர்களுக்கு வழங்கப்படும் PCCகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைந்துள்ளது கவலைக்குரியதாக விஷயமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications