பெங்களூரு: கர்நாடகா அரசு தங்கள் மாநிலத்தில் ஜிசிசி மையங்களுக்கென மூன்று புதிய மாவட்டங்களை நிறுவ இருப்பதாக தெரிவித்துள்ளது. பெங்களூருவில் 2024 ஆம் ஆண்டுக்கான தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது.
பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டின் 27ஆவது பதிப்பினை தொடங்கி வைத்த முதலமைச்சர் சித்தராமய்யா பெங்களூரு ,மைசூர் மற்றும் பெலகாவி ஆகிய பகுதிகளில் ஜிசிசி மையங்களுக்கு என மூன்று புத்தாக்க மாவட்டங்கள் நிறுவப்படும் என தெரிவித்தார். இங்கே ஜிசிசி மையங்களுக்கென தொழில் பூங்காக்கள் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஜிசிசி மையங்கள் எனப்படுபவை சர்வதேச நிறுவனங்களின் இந்திய கிளைகள் ஆகும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக கர்நாடக மாநிலத்தில் தான் ஜிசிசி மையங்களுக்கான கொள்கை வகுக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய அவர் கர்நாடக மாநிலம் ஜிசிசி மையங்களை திறப்பதற்கு உகந்த மாநிலமாக இருக்கிறது என பெருமிதம் தெரிவித்தார்.
புதிதாக நிறுவப்பட இருக்கும் புத்தாக்க மாவட்டங்கள் அண்மையில் தொடங்கப்பட்ட கேவின் நகரின் ஒரு பகுதியாக அமையும் என கூறினார். இவை கெம்ப கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலேயே அமையும் வகையிலும் உலக தரத்தில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகள் இங்கே நடைபெறும் என்றும் சித்தராமையா கூறினார்.
இந்தியாவிலேயே ஜிசிசி மையங்களை திறப்பதற்கு விருப்பமான மாநிலமாக கர்நாடகாவும் பெங்களூரு நகரமும் இருக்கிறது என அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு காரணம் இங்கே திறன் வாய்ந்த தொழில் நிபுணர்கள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கின்றனர், மேலும் செயற்கை நுண்ணறிவு பிரிவில் நிபுணர்கள் அதிகமாக இருக்கின்றனர் என கூறினார்.
நிபுணா கர்நாடகா திட்டத்தின் மூலம் தற்போது தொழில் துறைக்கு தேவையான திறன்களை கொண்ட நபர்களை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்துவதாக கூறினார் .இதற்காக மைக்ரோசாப்ட், ஐபிஎம் ஆகிய நிறுவனங்களோடு மாநில அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறினார்.
எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் ஐடி பூங்காக்கள் என்பன உள்ளிட்ட முன் முயற்சிகள் மூலம் சர்வதேச தொழில்நுட்ப நகரமாக பெங்களூரு உருவெடுத்து இருப்பதை குறிப்பிட்ட அவர் வரும் நாட்களிலும் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நகரமாக பெங்களூரில் இருக்கும் என்றும் அதற்கேற்ற வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தித் தருகிறது என்றும் தெரிவித்தார்.
ஐடி மட்டுமில்லாமல் பயோடெக்னாலஜி, ஏரோஸ்பேஸ், அட்வான்ஸ் மேனுபேக்ச்சரிங், செயற்கை நுண்ணறிவு ,ஃபின்டெக் ஆகிய பிரிவுகளிலும் கர்நாடக மாநிலம் சிறந்து விளங்குவதாக கூறினார். 2022 முதல் 2023 ஆம் ஆண்டுகளில் கர்நாடகாவில் 3036 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன இந்தியாவிலேயே இதுதான் அதிகம் என கூறினார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications