எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையிலே நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. உணவகங்கள் மூடப்பட்டு விட்டன இதனால் ஹோட்டல் சாப்பாடு கட்டாகிவிட்டது. ஹாஸ்டல்கள் மற்றும் அலுவலக கேண்டினில் குறிப்பிட்ட வகையிலான உணவுகள் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு விட்டது.
ஒருபுறம் எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக ஆட்டோக்கள் இயக்கப்படுவது குறைந்து இருக்கிறது. இதனால் ஆட்டோ கட்டணங்கள் உயர்ந்துவிட்டன. இப்படி பல பிரச்சினைகளுக்கு மத்தியில் அடுத்ததாக மின்வெட்டு பிரச்சினையும் ஏற்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது. கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூருவில் செயல்பட்டு வரக்கூடிய எலகங்கா மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறதாம்.

பெங்களூரில் டிசம்பரில் இருந்து ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிக அளவு மின்சாரம் தேவை. இந்த மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் எலகங்கா கேஸ் பவர் பிளான்ட் முக்கிய அங்கம் வகிக்கிறது. கர்நாடக மாநிலத்தின் முதல் கேஸ் அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம் இது.
ஒவ்வொரு நாளும் இந்த மின் உற்பத்தி நிலையத்தில் 370 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் புதன்கிழமை முதல் இந்த மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டுவிட்டது. இங்கே மின் உற்பத்திக்கு தேவையான கேஸ் சப்ளை நிறுத்தப்பட்டிருப்பது இதற்கு காரணம் என கர்நாடகா மின் பகிர்மான கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கெயில் நிறுவனம் இந்த உற்பத்தி நிலையத்திற்கு கேஸ் சப்ளையை நிறுத்திவிட்டதாம். இதனால் மின்சாரம் உற்பத்தி இல்லாமல் ஆலை மூடப்பட்டு இருக்கிறது. இதனால் பெங்களூரு நகரத்திற்கு மின்விநியோகத்தில் சிக்கல் ஏற்படக்கூடும் என்ன சொல்லப்படுகிறது. நாட்டில் எல்பிஜி கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அரசு வீட்டு உபயோக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என தெரிவித்துள்ளது.
எனவே எண்ணெய் நிறுவனங்கள் ஆலைகளுக்கான கேஸ் விநியோகத்தை நிறுத்திவைத்துள்ளன. இதனால் இந்த ஆலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி அத்தியாவசிய பட்டியலின் கீழ் வராததன் காரணமாக இந்த ஆலைக்கான கேஸ் சப்ளை நிறுத்தி வைத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கர்நாடகாவில் ஒரு நாளைக்கு 355 மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போது அவை தெர்மல், ஹைடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமும், வேறு மாநிலங்களிலிருந்து வாங்கப்படும் மின்சாரம் வாயிலாகவும் பூர்த்தி செய்யப்படுகிறது.
கேஸ் வினியோகம் தொடர்ந்து தடைப்பட்டு இந்த மின் உற்பத்தி நிலையம் தொடர்ந்து மூடப்படும் பட்சத்தில் பெங்களூருவில் மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பும், அதைத்தொடர்ந்து மின்வெட்டுக்கான வாய்ப்பும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் சவாலான சூழல் ஏற்படும் பட்சத்தில் அதனை தீர்ப்பதற்காக அரசு பஞ்சாப், ஹரியானா , உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்து பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே மின்வெட்டு அச்சம் வேண்டாம் என கூறுகின்றனர். மின்வெட்டு ஏற்பட்டால் பெங்களூரு ஐடி துறையே ஸ்தம்பித்து போகும்.
More From GoodReturns

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

சிலிண்டர் டெலிவரி OTP நடைமுறையில் மாற்றம்!! எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் புது அறிவிப்பு!!

எச்சரிக்கை!! சிலிண்டர் முதல் மருந்து விலை வரை..!! ஏப்ரல் 1 முதல் இதெல்லாமே மாறப்போகுது..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications