மாலத்தீவு நாட்டின் ஐடி துறை வளர்க்கும் கர்நாடகா.. பெங்களூரில் இப்படியொரு விஷயம் நடந்திருக்கா..?!

பெங்களூரு: அரசு முறை பயணமாக இந்தியா வந்த மாலத்தீவு அதிபருக்கு பெங்களூருவில் ஆடம்பர விருந்து அளிக்கப்பட்டது. மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மற்றும் அவரது மனைவி சஜிதா முகமது ஆகியோர் அரசு முறை பயணமாக இந்தியா வந்தனர்.

டெல்லியில் பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தனது இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மற்றும் அவரது மனைவி சஜிதா முகமது ஆகிய இருவருக்கும் ராஜ்பவனில் விருந்து அளித்தார். அப்போது இரு தரப்பிலும் பல்வேறு துறை சார்ந்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.

மாலத்தீவு நாட்டின் ஐடி துறை வளர்க்கும் கர்நாடகா.. பெங்களூரில் இப்படியொரு விஷயம் நடந்திருக்கா..?!

மாலத்தீவில் ஐடி துறை மேம்பாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என கர்நாடக அரசு அப்போது உறுதி அளித்தது. பெங்களூருவின் ஐடி துறையோடு இணைந்து செயல்படுவதற்கு மாலத்தீவு அரசு ஆர்வம் காட்டுவதாக அப்போது அதிபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து முதலமைச்சர் சித்தராமையா இந்தியாவின் சிலிக்கான் வேலி என பெங்களூரு அறியப்படுகிறது, ஸ்டார்ட் அப்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய கிளைகள் ஆகியவற்றை அமைப்பதற்காகவும் செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் மையமாகவும் பெங்களூரு திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்தார்.

இப்படி பல்வேறு வளர்ச்சிக்கு பெயர் போன பெங்களூரு நகரம் மாலத்தீவு நாட்டின் ஐடி துறை வளர்ச்சிக்கு உதவி செய்வதற்கு தயாராக இருக்கிறது எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் கெலாட்டும் கர்நாடக மாநில மற்றும் மாலத்தீவு அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது கர்நாடகா மற்றும் மாலத்தீவு இடையே வர்த்தக மற்றும் கலாச்சார ரீதியிலான உறவினை மேம்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா உறுதியளித்தார்.

சுற்றுலாவுக்கு பெயர் போன மாலத்தீவுக்கு ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அவர்களிடம் கர்நாடகாவின் பாரம்பரியமான கைவினைப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்கு மாலத்தீவு மற்றும் கர்நாடகா இடையே வர்த்தக ரீதியிலான உறவினை மேம்படுத்துவதற்கும் கலாச்சார ரீதியிலான உறவினை மேம்படுத்துவதற்கும் தனது அரசு தயாராக இருக்கிறது என கூறினார்.

அதிபரின் மனைவி சஜிதா முகமது பெங்களூருவில் கல்வி பயின்றவர் என்பதை சுட்டிக்காட்டி பேசிய முதலமைச்சர் சித்தராமையா பெங்களூரு மற்றும் மாலத்தீவு இடையிலான நீண்ட கால உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த பயணம் அமைந்திருக்கிறது என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக மாநில ஆளுநர் கெலாட் இந்த சந்திப்பு இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்தார். பெங்களூருவில் மாலத்தீவு துணை தூதரகம் திறக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இது மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு மேலும் உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.

பின்னர் உரையாற்றிய மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்த குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோருக்கு நன்றி கூறினார் . பெங்களூருவில் தங்களை அன்பாக வரவேற்று உபசரித்த ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+