இந்தியாவில் பெரும்பாலான மக்கள் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகள் முதல் அதிக ஊதியம் பெறும் IT வேலைகள் வரை, பல மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களின் முதல் தேர்வாக இருப்பது பெங்களூரு. கர்நாடக மாநிலத்தின் அடையாளமாக இருப்பதும் பெங்களூர் தான்.
கர்நாடகா பொருளாதார வளர்ச்சிக்கு பெங்களூர் பெரும் பங்காற்றினாலும், சுரங்கம், விவசாயம் மற்றும் பிற தொழில்கள் என அம்மாநிலத்தின் பிற முக்கிய மாவட்டங்களும் கணிசமான பங்கீடு கொண்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் தென்னிந்தியாவில் செழிப்பான பொருளாதாரத்தை கொண்ட மாநிலமாகவும் கர்நாடகா விளங்குகிறது.

இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கர்நாடகா மாநிலம் முழுவதும் நடக்கும் காரணத்தால், இந்திய மக்களின் கவனம் முழுவகும் கர்நாடகா பக்கம் திரும்பியுள்ளது.
2022-23ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஏழு சதவீதத்துடன் ஒப்பிடுகையில், கர்நாடகாவின் பொருளாதாரம் 7.9 சதவீதம் வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் தனிநபர் வருமானம் 3 லட்சம் ரூபாய், இது தேசிய சராசரி அளவான 1.7 லட்சம் ரூபாயை ஒப்பிடுகையில் அதிகமாகும்.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பயோடெக்னாலஜி துறைகள் குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்த்து, நாட்டின் மொத்த ஏற்றுமதியில் இவ்விரு துறைகளும் பங்களித்துள்ளன. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் 40 சதவீத பொருளாதாரம் ஏற்றுமதியில் இருந்து வருகிறது. இதில் எலக்ட்ரானிக்ஸ், மென்பொருள் மற்றும் பயோ டெக்னாலஜி ஏற்றுமதி பெரும் பங்களிக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் மட்டும் சுமார் 5500க்கும் அதிகமாக ஐடி மற்றும் ஐடிஸ் நிறுவனங்கள் உள்ளது, இதில் 750க்கும் பன்னாட்டு நிறுவனங்களும் உள்ளது. ஐடி துறை மட்டுமே சுமார் 58 பில்லியன் டாலர் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு பங்களிக்கும் நிலையில், இத்துறையில் 12 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளையும், 31 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 24 சதவீதம் ஐடி துறை பங்களிக்கிறது. இதை தொடர்ந்து விவசாயம் மற்றும் அதனை சார்ந்த துறைகள் 15 சதவீதமும், உற்பத்தி துறை 13.3 சதவீதமும் பங்களிக்கிறது.
அக்டோபர் 2019 முதல் டிசம்பர் 2022 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் அதிக அன்னிய முதலீட்டை ஈர்த்த மாநிலங்களில் கர்நாடகா 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் இருக்கும் மாநிலம் எது என்பதை கமெண்ட் பண்ணுங்க..!!
கர்நாடகா மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில் மாலை நிலவரப்படி 50 சதவீதத்தை மட்டுமே நெருக்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது மாலை வெளியாகும் எக்சிட் போல் முடிவுகள் படி கணித்துவிட முடியும். கர்நாடகா மாநிலத்தில் யாருடைய ஆட்சி வந்தாலும் ஐடி மற்றும் உற்பத்தி துறை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருப்பதை உறுதி செய்யப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications