சென்னை மற்றும் பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் வேயில் கர்நாடகாவில் சாலை பணிகள் முழுவதும் நிறைவடைந்தது அடுத்து அந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் பெங்களூரு இடையிலான பயண நேரத்தை குறைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 260 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த எக்ஸ்பிரஸ்வே சாலை தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா என மூன்று மாநிலங்கள் வழியாக பயணம் செய்கிறது. இதில் மூன்று கட்டங்களாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இதில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு என ஆகிய மூன்று மாநிலங்களிலும் தனித்தனியாக ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. இதில் முதல் கட்டமாக கர்நாடகாவில் இருக்கும் 71 கிலோமீட்டர் தொலைவிலான சாலை பணிகள் முழுமை அடைந்து தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது .
கர்நாடகாவில் ஓஸ்கேட் முதல் மாலூர் வரை 27.1 கிலோமீட்டர், மாலூர் முதல் பங்காருபேட்டை வரை 27.1 கிலோமீட்டர். பங்காரப்பேட்டை முதல் பெத்தமங்கலம் வரை 17.5 கிலோமீட்டர் என மூன்று கட்டங்களாக இந்த எக்ஸ்பிரஸ்வே சாலை பணிகள் நடந்தன.
தற்போது பணிகள் முடிவடைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் மக்களும் நீண்ட பயணம் செல்பவர்களும் சாலையை பயன்படுத்த தொடங்கி விட்டதாகவும் கூறியுள்ளனர். இந்த பணிகள் முன்கூட்டியே முடிவடைந்திருக்கும் ஆனால் ஓஸ்கேட் பகுதியில் இருந்த ஒரு கோயிலை இடமாற்றம் செய்வது தொடர்பாக உள்ளூர் மக்களுக்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக முடிவு எட்டப்படாமல் இருந்ததே சாலை பணிகள் தாமதம் அடைந்ததற்கு காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
தற்போதைக்கு இந்த சாலையை பயன்படுத்துவர்களிடம் எந்தவித தோல் கட்டணமும் வசூல் செய்யப்படுவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பெங்களூரு மற்றும் சென்னை இடையே பயணம் செய்யும் வகையில் இந்த எக்ஸ்பிரஸ் வே உலகதரத்தில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த எக்ஸ்பிரஸ்வே பணிகள் முடிவடைந்து விட்டால் தற்போது பெங்களூர் சென்னை இடையிலான பயண நேரம் 6 மணி நேரமாக இருக்கும் நிலையில் அது 3 மணி நேரமாக குறைந்து விடும்.
தமிழ்நாடு மற்றும் ஆந்திரா பகுதியில் தற்போது எக்ஸ்பிரஸ்வே அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த பணிகள் முழுமை பெற்று சாலை பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது.
இந்த எக்ஸ்பிரவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பிரதான திட்டங்களில் ஒன்றாகும். இந்த சாலையை பிரதமர் நரேந்திர மோடியே மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications