இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் அதன் ஏற்றுமதியில் தான் என உறுதியாகியிருக்கும் வேளையில் இத்துறைக்கு ஆதாரமான செமிகண்டக்டர் தயாரிப்பில் முதலீட்டுக்களையும், நிறுவனங்களையும், தொழில்நுட்பத்தை ஈர்ப்பதில் இந்திய அரசு தீவிரமாக உள்ளது.
செமிகண்டக்டர் தயாரிப்பிலும் அதன் வர்த்தகத்தில் முதலீட்டை ஈர்த்துவிட்டால் வேகமாக வளர்ச்சி அடைய முடியும் என்பதால் மாநில அரசுகளும் இத்துறையில் முதலீட்டை ஈர்க்க தனிப்பட்ட முயற்சியில் இறங்கியுள்ளது. குறிப்பாகத் தொழில்நுட்பத்தில் மிகவும் வலிமையாக இருக்கும் தென்னிந்திய மாநிலங்கள் மிகவும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், செமிகண்டக்டர் தொடர்பான எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் சுமார் 2.8 - 3 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் இருப்பதாகவும், இதில் மார்ச் 2024க்குள் குறைந்தபட்சம் 50% முதலீடுகள் உறுதி செய்யப்படும் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் ஏற்கனவே சில முதலீடுகளை செமிகண்டக்டர் தயாரிப்பு மற்றும் OSAT துறையில் பெற்றுள்ள நிலையில் அடுத்த 5 மாதத்தில் புதிதாக 3 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டைப் பெற்ற திட்டமிட்டு உள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் மைக்ரான் குஜராத்தில் செமிகண்டக்டர் தொழிற்சாலை கட்டுமான பணிகளைத் துவங்கியது.
செமிகண்டக்டர் துறையில் முக்கியமான நிறுவனங்களை ஈர்க்கவும், கர்நாடக மாநிலத்தின் விநியோகச் சங்கிலி நன்மைகளை முன்வைத்து அதனுடன் ஊக்கத்தொகை மற்றும் தொழிலாளர் கொள்கைகளை மாற்றியமைக்க அரசின் தயார் நிலை ஆகிய சலுகைகள் அளிக்க உள்ளது என Bengaluru Tech Summit கர்நாடகா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே கூறினார்.
இக்கூட்டத்தில் பிரியங்க் கார்கே கூறுகையில் தானும் மாநில அதிகாரிகளும் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்களைச் சந்தித்ததாகவும், வணிகத்திற்கு ஏற்ற கொள்கை மாற்றங்கள் மற்றும் பல்வேறு சலுகைகள் குறித்து அவர்களுக்கு உறுதியளித்ததாகவும் கூறினார்.
குவாண்டம் கம்ப்யூட்டிங் மையங்களை அமைக்கப் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் கர்நாடக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கார்கே கூறினார்.
இதை விட முக்கியமாக, பிரியங்க் கார்கே பேசுகையில் EV துறையில் இருந்த முதலீட்டு வாய்ப்புகளை தமிழ்நாட்டிடம் இழந்த நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்திக்கான சலுகைகள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான கொள்கைகளை மாநில அரசு உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications