2047க்கு குறிவைக்கும் கர்நாடக அரசு.. 5 துறை, 3 டிரில்லியன் டாலர் டார்கெட்.. தமிழ்நாடு உடன் போட்டி!

விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு 2036க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில், அண்டை மாநிலமான கர்நாடக 2047க்குள் சுமார் 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற புதிய இலக்கை அம்மாநில முதல்வர் டிகே சிவகுமார் அறிவித்துள்ளார்.

இதற்காக 5 முக்கிய துறைகளையும், இத்துறையின் வளர்ச்சிக்காகவும் திட்டத்தையும் நேற்றை சுதந்திர தின உரையில் தெரிவித்தார். இந்த மாபெரும் இலக்கை அடைய கர்நாடக அரசு 5 முக்கிய துறைகளை சேர்வு செய்துள்ளது கல்வி, ஹெல்த்கேர், விவசாயம், தொழிற்துறை, உள்கட்டமைப்பு ஆகிய 5 துறைகளில் பெரிய அளவில் முதலீடு செய்த திட்டமிட்டு உள்ளதாக அறிவித்தார்.

2047க்கு குறிவைக்கும் கர்நாடக அரசு.. 5 துறை, 3 டிரில்லியன் டாலர் டார்கெட்.. தமிழ்நாடு உடன் போட்டி!

இதேபோல் தமிழ்நாட்டை போல்வே கர்நாடகாவும் தனது பொருளாதார பவர் சென்டரை பல முனைகளில் விரிவாக்கம் செய்யவும், ஏஐ துறையில் மிகப்பெரிய சக்திவாய்ந்த மாநிலமாகவும் மாற்ற மாபெரும் திட்டத்தை தீட்டி வருகிறார் டிகே சிவகுமார்.

Also Read

உற்பத்தி துறை

கர்நாடகாவின் உற்பத்தி துறையை மற்றும் சரக்கு போக்குவரத்தை இணைக்கும் முக்கிய பகுதியான பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் அருகில் இருக்கும் தொட்டபெல்லாபுராவில் மட்டும் சுமார் 20000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்து, இப்பகுதியில் மட்டும் சுமார் 1 லட்சம் வேலைவாய்பப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கர்நாடக அரசு கடந்த 3 வருடத்தில் 1.34 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 945 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நில வங்கி

கர்நாடகாவில் முதலீடு செய்ய வரும் உற்பத்தி, டெக்ஸ்டைல், ஏரோஸ்பேஸ், டிபென்ஸ் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு தேவையான தொழிற்துறை நிலத்தின் விபரங்களை டிஜிட்டல் இண்டஸ்ட்ரியல் லேண்ட் பேங்க் என்ற பெயரில் GIS தரவுகளுடன் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

Recommended For You

பெங்களூர் 2.0

கர்நாடகாவின் பொருளாதாரம், வர்த்தகம் அனைத்தும் பெங்களூரை மட்டுமே சார்ந்துள்ளது. இதை உடைத்து தமிழ்நாட்டை போல் பலமுனை வளர்ச்சி பாதையை உருவாக்க கலபுராகி, பெலகாவி, ஹுப்பள்ளி-தர்வாட், மங்களூரு மற்றும் மைசூரு ஆகிய பகுதிகளில் LEAP திட்டத்தின் கீழ் குளோபல் டெக்னாலஜி சென்டர் அமைத்து தொழில்நுட்ப ரீதியாக இயங்கும் துறைகளுக்கான இடமாக மாற்றவும், பெங்களூருக்கு மாற்று இடமாகுவும் உருவாக்கப்ரட உள்ளதாக டிகே சிவகுமார் தெரிவித்தார்.

ஏஐ கல்வி

அடுத்தாக ஏஐ யுகத்தில் கர்நாடகா மிக முக்கியமான மாநிலமாக இருக்க வேண்டும் என்ற கனவு 6ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு கம்பியூட்டர் கோடிங் பாடத்தின் வாயிலான திறனை வளர்க்கும் திட்டத்தை கொண்டு வரும் திட்டத்தையும் அறிவித்தார். இதற்காக ஏஐ அக்ஷரா அபின்யானா, கோடிங் குருக்கள் ஆகிய இரண்டு திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளார்.

இதேபோல் அடுத்து ஏஐ காலம் என்பதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் விரைவில் இந்தியாவின் முதல் ஏஐ பல்கலைகழகத்தை பெங்களூரில் அமைக்க உள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் ஐடி தலைநகரம் வரும் காலத்தில் ஏஐ தலைநகரமாக பெங்களூரு மாறபோகிறது என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+