பெங்களூரு: மத்திய அரசு செமி கண்டக்டர் உற்பத்தியில் கவனம் செலுத்தி வரும் நிலையில் குஜராத்தை அடுத்து கர்நாடக மாநிலத்தை செமி கண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செமி கண்டக்டர் பிரிவில் சீனா உள்ளிட்ட நாடுகளை சார்ந்து இருக்காமல் சொந்தமாக உற்பத்தி செய்ய வேண்டும், இந்தியாவில் செமி கண்டக்டர்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற இலக்கை நோக்கி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது .
தற்போது குஜராத் மாநிலம் செமி கண்டக்டர் உற்பத்தி மையமாக மாறி இருக்கிறது. டாடா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் குஜராத் மாநிலத்தில் தங்களுடைய செமி கண்டக்டர் உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளன.

குஜராத்தை தொடர்ந்து மத்திய அரசு கர்நாடக மாநிலத்தை செமி கண்டக்டர் உற்பத்தி மையமாக உருவாக்கும் என கேனஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ரகு பணிக்கர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் செமி கண்டக்டர் உற்பத்தியை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசும் கர்நாடக மாநில அரசும் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருவதாக அவர் கூறுகிறார்.
ஏனெனில் கர்நாடக அரசு அண்மை காலமாக செமி கண்டக்டர் துறையில் இயங்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தங்களுடைய மாநிலத்தை செமி கண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும் பணிக்கர் கூறியுள்ளார்.
அண்மையில் தான் மத்திய அரசு கேனஸ் டெக்னாலஜி நிறுவனத்திற்கு செமி கண்டக்டர் பொருத்துதல் மற்றும் சோதனை மையத்தை குஜராத் மாநிலம் சனாந்த் பகுதியில் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது. 3,300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த ஆலை அடுத்த 18 முதல் 24 மாதங்களில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செமிகண்டக்டர் திட்டத்தின் கீழ் ஆலை அமைக்க அனுமதி பெற்றுள்ள ஐந்தாவது நிறுவனம் கேனஸ் டெக்னாலஜி நிறுவனம் ஆகும். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இந்தியாவில் செமி கண்டக்டர் என்ற தலைப்பில் ஒரு திட்டத்தை தொடங்கியது. தைவானை போல இந்தியாவையும் செமி கண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றுவதே இலக்கு என்றும் 76 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இது சாத்தியப்படும் என்றும் அப்போது அரசு தெரிவித்தது.
தற்போது கேனஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் குஜராத்தில் அமைக்கும் தங்களுடைய ஆலையில் அடுத்த 10 முதல் 12 மாதங்களிலேயே 100 மில்லியன் சிப்புகளை தயாரிக்கும் வகையிலான வசதிகள் ஏற்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது. ஆலை முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது ஒரு பில்லியன் சிப்புகளை தயாரிக்கும் என தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications