பெங்களூருவில் 153 ஏக்கர் பிரம்மாண்டம்.. புதிய கப்பான் பார்க் உருவாக்கும் கர்நாடக அரசு..!!

பெங்களூரு: பெங்களூருவில் கப்பான் பூங்காவை போலவே 153 ஏக்கர் பரப்பளப்பில் பரப்பளவில் மேலும் ஒரு பசுமை பூங்காவை உருவாக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. கார்டன் சிட்டி என அறியப்படும் பெங்களூர் நகரின் மையத்தில் கப்பான் பூங்கா அமைந்துள்ளது. வழக்கமான போக்குவரத்து நெரிசல், போட்டி நிறைந்த வாழ்க்கை ஆகியவற்றில் இருந்தெல்லாம் விடுபட்டு ரிலாக்ஸ் செய்வதற்கும் தூய்மையான காற்றை சுவாசிப்பதற்கும் பசுமை நிறைந்த பகுதியை காண வேண்டும் என விரும்புபவர்கள் கட்டாயம் கப்பான் பூங்காவிற்கு சென்று வரலாம்.

காலை மற்றும் மாலை வேலைகளிலும் வார இறுதி நாட்களிலும் இந்த தூய்மையான காற்றை சுவாசிப்பதற்கும் பசுமை நிறைந்த பகுதிகளை காண்பதற்காகவும் ஏராளமானவர்கள் கப்பான் பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.

 பெங்களூருவில் 153 ஏக்கர் பிரம்மாண்டம்.. புதிய கப்பான் பார்க் உருவாக்கும் கர்நாடக அரசு..!!

இதனிடையே கர்நாடக அரசு கப்பான் பூங்காவை போலவே மற்றொரு பசுமை நிறைந்த பூங்காவை வடக்கு பெங்களூரு பகுதியில் அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெங்களூரு தொழில் ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய சூழலில் இந்த நகரம் தன்னுடைய பசுமை தன்மையை இழந்து விடக்கூடாது என்பதற்காக கூடுதலாக ஒரு பசுமை பூங்காவை அமைக்க இருக்கிறோம் என கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வரா காந்த்ரா தெரிவித்துள்ளார்.

இந்த புதிய பூங்கா எலஹன்கா பகுதியில் கட்டமைக்கப்பட இருக்கிறது என்று அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். எனவே பெங்களூருவில் வார இறுதி நாட்களில் பசுமை நிறைந்த இடத்திற்கு சென்று பொழுதை போக்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கு கப்பான் பூங்கா தவிர தற்போது எலஹன்கா பூங்காவும் அமைய இருக்கிறது.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கர்நாடக வனத்துறை அமைச்சர் காந்த்ரா, கர்நாடகா வன மேம்பாட்டு கழகம் சார்பாக வடக்கு பெங்களூரு பகுதியில் 153 ஏக்கர் பரப்பளவிலான நிலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலத்தை கப்பான் பூங்காவை போலவே ஒரு பசுமை நிறைந்த பூங்காவாக மாற்ற இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

வட பெங்களூரு மக்கள் சென்று வரக்கூடிய வகையில் இந்த பூங்காவினை அமைப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த பூங்காவிற்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான சாலுமரத திம்மக்காவின் பெயர் சூட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் துமக்கூருவை அடுத்துள்ள கூதூர் கிராமத்தை சேர்ந்தவர் சாலுமரத திம்மக்கா.

இவர் தனக்கு பிள்ளைகள் இல்லாததால் கூதூர் கிராமத்தில் 90 ஆண்டுகளுக்கு முன் சாலை ஓரத்தில் ஆலமரக் கன்றுகளை நட்டார். பிறகு இவற்றை பிள்ளைகளை போல பத்திரமாக வளர்த்தார். இவ்வாறு 385 ஆலமரங்களை வளர்த்த திம்மக்காவுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+