பெங்களூரு: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி உடன் நோக்கு நேர் போட்டிப்போட்டு வரும் கர்நாடக மாநில அரசு, புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக கர்நாடகா தொழில்துறை 2025 - 30 என்ற பெயரில் ஒரு புதிய கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. உயர்தர தொழில்நுட்ப உற்பத்திக்கான முதலீட்டு மையமாக கர்நாடகாவை மாற்ற வேண்டும் என்பதே இந்த கொள்கையின் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிலிருந்து 2030 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்குள் 7.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்றும் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை புதிதாக உருவாக்க வேண்டும் என்றும் இந்த தொழில் கொள்கையில் இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசின் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய போது அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

கர்நாடகா என்றாலே பெங்களூருவில் தான் உற்பத்தி ஆலைகளும் ஐடி நிறுவனங்களும் இருக்கின்றன என்ற நிலை மாறி வளர்ச்சி என்பது மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவடையும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த கொள்கை தயாரிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
விமான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு, மின்னணு, ஸ்டீல், சிமெண்ட், மெட்டல் உற்பத்தி மற்றும் ஆடைகள், ட்ரோன்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி, மருத்துவத் தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம், பயோ டெக்னாலஜி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருந்து துறை, வாகனத்துறை மற்றும் சுற்றுலா என பல்வேறு துறைகளிலும் மாநிலத்தில் முதலீடுகளை ஈர்த்து மாநிலத்தின் வளர்ச்சியையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் என முடிவெடுத்து இருப்பதாக அமைச்சர் எம்.பி பாட்டில் கூறியுள்ளார்.
இந்த கொள்கை அறிவிப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா இந்தியாவின் பொருளாதார மாற்றத்தில் எப்பொழுதுமே கர்நாடகா முன்னிலையில் இருக்கிறது என பெருமிதம் தெரிவித்தார். அவர் நாட்டிலேயே முதலீட்டாளர்களுக்கு உகந்த ஒரு மாநிலமாக கர்நாடகா இருக்கும் என்ற உறுதியை நான் மீண்டும் ஒருமுறை வழங்குகிறேன் என தெரிவித்தார்.
கூடிய விரைவில் பெங்களூருவில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தி நிறுவனங்களை எந்த அச்சமும் என்று இங்கே நிறுவலாம் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மென்பொருள்களில் 40% கர்நாடகாவில் இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது என கூறினார். நாட்டில் 60 சதவீத மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி கர்நாடகாவில் இருந்து செய்யப்படுகின்றன இது தொடர்ந்து வளர்ச்சி அடையும் என்றார்.
ஓலா, ஏதர், மகேந்திரா எலக்ட்ரிக் உள்ளிட்ட மின்சார வாகன நிறுவனங்கள் கர்நாடகாவில் அதிக முதலீடு செய்துள்ளதால் இந்தியாவின் மின்சார வாகன தலைநகரம் என கர்நாடகாவை அழைக்கலாம் என்று அவர் கூறினார்.
Story written by: Devika
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications