பெங்களூரில் மார்ச் மாதத்திற்கு பிறகு டீ, காபி, தயிர் மற்றும் பிற பால் பொருட்களின் விலை அதிகரிக்கவுள்ளது. அதோடு பால் பாக்கெட்டின் விலையும் உயரவுள்ளது. மார்ச் 7-ஆம் தேதி அம்மாநில பட்ஜெட்டுக்கு பிறகு நந்தினி பாலின் ஒரு லிட்டர் விலை 5 ரூபாய் வரை அதிகரிக்கவுள்ளது. தற்போதுள்ள 1050 மில்லியிலிருந்து ஒரு லிட்டர்ராக பாலின் அளவும் குறைக்கப்படுகிறது.
இதன் மூலம் ஒரு லிட்டர் நந்தினி டோன்ட் பாலின் விலை 47 ரூபாயாக இருக்கும். கடந்த 3 ஆண்டுகளில் கர்நாடகா பால் கூட்டமைப்பு (KMF) முன்னெடுத்த பெரிய விலை உயர்வு இதுவாகும். இதற்கு முன்னர் 2022-ஆம் ஆண்டில் ஒரு லிட்டர் பாலின் விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் KMF பாலின் விலையை பாக்கெட்டுக்கு 2 ரூபாய் உயர்த்தியது. ஆனால் அப்போது ஒரு பால் பாக்கெட்டுக்கு 50 மில்லி பாலின் அளவு அதிகரிக்கப்பட்டது. பாலின் அளவும் அதிகரிக்கப்பட்டு விலையும், அதிகரிக்கப்பட்டதால் 2024-ஆம் ஆண்டில் விலை உயர்வு இல்லை என்று KMF தொடர்ந்து கூறி வந்தது.

அதோடு வருகின்ற மார்ச் மாதத்திற்குள் காபி தூள் விலையை 1 கிலோவிற்கு 200 ரூபாய் வரை உயர்த்த இருப்பதாக காபி தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு பாலின் விலை உயர்வு இருக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது குடிமக்களுக்கு மற்றொரு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. பல இந்தியர்கள் காலை ஒருமுறை, 11 மணி அளவில் ஒருமுறை, மாலை ஒரு முறை என 3 முறை டீ, காபி குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
இந்த விலை உயர்வுக்கு மத்தியில் பிஎம்டிசி பேருந்துகள் மற்றும் நம்ம மெட்ரோவின் டிக்கெட் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி கர்நாடக அரசு தண்ணீர் கட்டணத்தை உயர்த்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.
வரப்போகும் பால் விலை உயர்வு குறித்து பேசிய, KMF நிர்வாக இயக்குனரான பி. சிவசாமி "விவசாயிகள் பால் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதி முடிவு முதலமைச்சரிடம் உள்ளது. மாநில பட்ஜெட்டுக்கு பிறகு இது நடைமுறைக்கு வரும்", என்று கூறினார். உயர்த்தப்படவிருக்கும் பால் விலையும் செலவு பகிர்வு குறித்து கேஎம்எஃப் விவசாயிகள், பால் கூட்டுறவு சங்கங்கள், ஊழியர் சங்கங்கள் மற்றும் பிற நபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications