கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சம்பள உயர்வு, அரியர் பாக்கியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான கேஎஸ்ஆர்டிசி போக்குவரத்து ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
Bengaluru Chalo என்ற பெயரில் பல்வேறு போக்குவரத்து சங்க ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பெங்களூருவில் மாபெரும் ஆர்ப்பாட்டமும், நாளைய தினம் மாநிலம் முழுவதும் ஸ்டிரைக்கிலும் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பெங்களூருவில் பல்வேறு பகுதிகளிலும் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. இது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் , வேலைக்கு செல்வோர் அரசு பேருந்துகள் கிடைக்காமல் தவிப்புக்கு ஆளாக நேர்ந்துள்ளது. அரசு பேருந்துகளுக்கு மாற்றாக மெட்ரோ, ஆட்டோ மற்றும் வாடகை வாகன செயலிகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். பெங்களூருவில் அரசு பேருந்துகள் இயங்காததால் தமிழ்நாட்டு மக்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஓசூரில் இருந்து பெங்களூருக்கு வேலை மார்க்கமாக செல்பவர்கள் வேலைக்கு செல்வதும் திரும்ப ஊர் திரும்புவதிலும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம்.
பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் வெள்ளிக்கிழமைகளில் வொர்க் ஃபிரம் ஹோம் முறையை வழங்குவதால் பெங்களூருவில் வேலை செய்யும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வியாழக்கிழமைகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். அவர்களுக்கு இன்று சொந்த ஊர்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கர்நாடக பேருந்துகள் இல்லாததால் கூட்டம் அலைமோதும். இன்று மட்டுமல்ல நாளையும் போராட்டம் நடப்பதால் பெங்களூருவில் இருக்கும் தமிழ் நாட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.

கர்நாடக மாநில போக்குவரத்து ஊழியர்களை பொறுத்தவரை 2024ஆம் ஆண்டிலிருந்து 38 மாதங்களுக்கான சம்பள உயர்வை அமல்படுத்தி அரியர் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஆனால் கர்நாடக மாநில அரசு 26 மாதங்களுக்கான அரியர பணத்தை வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டு அது தொடர்பாக 1271 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த அரசாணை பிறப்பித்ததுள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் 2024 ஜனவரி 1 முதல் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரும் நிலையில் அரசு 2025 முதல் உயர்த்தி வழங்கியிருக்கிறது. அரசின் இந்த நிவாரணத்தை ஏற்காத ஊழியர்கள் இன்றைய தினம் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்திருக்கின்றனர்.
இந்த சூழலில் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் போக்குவரத்து ஊழியர்கள் கர்நாடக அரசின் நிலைமையை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும், வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். ஆனால் போக்குவரத்து ஊழியர்கள் இவற்றை ஏற்பதாக இல்லை. இதற்கிடையே கர்நாடக மாநில போக்குவரத்து துறை இன்றைய தினம் வேலைக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்காது என தெரிவித்திருக்கிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications