புதிய முதலீடுகள், புதிய வர்த்தகத்தை பெறுவதில் தென்னிந்திய மாநிலங்கள் மத்தியில் எப்போதும் கடுமையான போட்டி நிலவும். இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளாவில் அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்கும் காரணத்தால் தென்னிந்திய மாநிலங்களில் இருந்து போட்டி குறைந்துள்ளது. இதை வாய்ப்பாக பல மாநிலங்கள் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பெரிய மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சரான எம்பி பாட்டீல் சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் ஏரோஸ்பேஸ் & டிஃபென்ஸ், மெஷின் டூல்ஸ், ஆட்டோ/EV மற்றும் கிரீன் எனர்ஜி துறைகளில் புதிய வளர்ச்சி திட்டங்களுக்கான ரோடுமேம் கொடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு பல முக்கிய திட்டங்கள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக டிஃபென்ஸ் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் கர்நாடகாவை நாட்டின் தலைநகரமாக மாற்றுவது, ஃப்ளை-டாக்ஸி சேவைகள், EV சார்ஜிங் நிலையங்கள் மற்றும் டேட்டா சென்டர்கள் உள்ளிட்டவை முக்கிய இடம் பெற்றன.
டிஃபென்ஸ் எலக்ட்ரானிக்ஸ்
அமைச்சர் பாட்டீல் கர்நாடகாவை டிஃபென்ஸ் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியின் தலைநகரமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்காக 200 ஏக்கர் டிஃபென்ஸ் எலக்ட்ரானிக்ஸ் பார்க் மற்றும் 100 ஏக்கர் ஏவியானிக்ஸ் மற்றும் சென்சார் பார்க் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு முதலீட்டு பகுதி (Special Investment Region) செயல்படத் தொடங்கியவுடன் இந்த திட்டங்கள் நடைமுறைக்கு வரும் என்று அவர் கூறினார்.
எந்த இடம்?
மேலும், இந்த டிஃபென்ஸ் எலக்ட்ரானிக்ஸ் பார்க் மற்றும் சென்சார் பார்க் ஆகியவை பெங்களூரு வடக்கு-கோலார்-சிக்கபல்லாபுர் மற்றும் தார்வாட்-விஜயபுரா-பெலகாவி பகுதிகளில் டிஃபென்ஸ் காரிடார் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்குமாறு கர்நாடக அரசு கோரியுள்ளது. பெங்களூரு-மைசூரு இடையேயும் ஒரு இண்டஸ்ட்ரீயல் காரிடார் அமைக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட தொழிலதிபர்கள் வலியுறுத்தினர்.
ஃப்ளை-டாக்ஸி சேவைகளுக்கு பச்சைக்கொடி
சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் 2028இல் ஜப்பானில் ஏரியல் டாக்ஸி சேவைகளை தொடங்க உள்ளன. இதற்கு பெங்களூருவைச் சேர்ந்த சாஸ்மோஸ் (Sasmos) நிறுவனம் மின்சார உபகரணங்கள் வழங்குகிறது. இதே போன்ற ஃப்ளை-டாக்ஸி சேவைகளை கர்நாடகாவில் தொடங்க ஏதுவான கொள்கையை வகுக்க வேண்டும் என்று தொழிலதிபர்கள் பரிந்துரைத்தனர். இதை தீவிரமாக ஆராய்வதாக அமைச்சர் பாட்டீல் உறுதியளித்தார்.
EV துறையில் புதிய திட்டங்கள்
ஆட்டோ மற்றும் EV துறை விஷன் குழு உறுப்பினர்கள் dry ports நெட்வொர்க் அமைக்க வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் EV சார்ஜிங் நிலையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இரு சக்கர EVகளுக்கான சோதனை வசதி தேவை என்ற கோரிக்கையை அமைச்சர் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.
கிரீன் எனர்ஜி மற்றும் டேட்டா சென்டர்கள்
கிரீன் எனர்ஜி துறையில் பேட்டரி அடிப்படையிலான எனர்ஜி ஸ்டோரேஜ் கொள்கை தேவை என்று தொழிலதிபர்கள் வலியுறுத்தினர். டேட்டா சென்டர்கள் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அனைத்து பரிந்துரைகளையும் தீவிரமாக ஆராய்ந்து பதிலளிப்பதாக அமைச்சர் பாட்டீல் உறுதியளித்தார்.


Click it and Unblock the Notifications