ரூ.2,200 கோடிக்கு பிஸ்னஸ்!! கொரோனாவுக்கு பிறகு திரிஷாவுக்கு பிறந்த நல்ல காலம்!!

தமிழ் திரையுலகின் கனவு கன்னிகளுள் ஒருவராக தொடர்ந்து தன்ன தக்க வைத்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்து பல வெற்றிப்படங்களை தந்தவர்.

தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் ரசிகர்களை கொண்டுள்ளார் திரிஷா. திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, கொரோனா பேரிடருக்குப் பிந்தைய காலத்தில் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார்.

ரூ.2,200 கோடிக்கு பிஸ்னஸ்!! கொரோனாவுக்கு பிறகு திரிஷாவுக்கு பிறந்த நல்ல காலம்!!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் அண்மையில் கருப்பு திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் திரிஷா முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். கருப்பு திரைப்படம் தமிழ் பட உலகில் வசூல் சாதனையை குவித்துள்ளது. அந்த் வகையில் koimoi தளம் வெளியிட்டுள்ள தகவலின் படி கருப்பு திரைப்படத்தின் வசூலையும் சேர்த்து, கொரோனாவுக்குப் பிறகு திரிஷா நடித்த படங்கள் ஒட்டுமொத்தமாக உலகளவில் 2,200 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை கடந்துள்ளன.

கொரோனாவுக்குப் பிறகு திரிஷா நடிப்பில் 10 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. அதில் 5 படங்கள் உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த பொன்னியின் செல்வம் படம் இரண்டு பாகங்களுமே சூப்பர் ஹிட். விஜய்யுடன் திரிஷா ஜோடியாக நடித்த லியோ படமும் செம் ஹிட் ஆனது.

நடிகர் அஜீத்துடன் விடா முயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களிலும் திரிஷா தான் ஜோடியாக இருந்தார். கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் படத்திலும் திரிஷாவுக்கு முக்கிய கதாபாத்திரம் இருந்தது.

ரூ.2,200 கோடிக்கு பிஸ்னஸ்!! கொரோனாவுக்கு பிறகு திரிஷாவுக்கு பிறந்த நல்ல காலம்!!

கொரோனாவுக்கு பின்னர் திரிஷா நடித்த படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம்:

பொன்னியின் செல்வன் 1 - ரூ.489.51 கோடி

ராங்கி - ரூ.11 கோடி

பொன்னியின் செல்வன் 2 - ரூ.344.71 கோடி

தி ரோடு - ரூ.2 கோடி

லியோ - ரூ.606.42 கோடி

ஐடென்டிட்டி (Identity) - ரூ.17.26 கோடி

விடாமுயற்சி - ரூ.135.23 கோடி

குட் பேட் அக்லி - ரூ.248.94 கோடி

தக் லைஃப்- ரூ.98.02 கோடி

கருப்பு - ரூ.310.77 கோடி (27 நாட்களில்)

ஒட்டுமொத்தமாக திரிஷா நடித்த படங்களின் வசூல் ரூ.2,263.86 கோடியாக உள்ளது. 'கருப்பு' திரைப்படம் 27 நாட்களில் ரூ.310.77 கோடி வசூலித்து திரிஷாவின் மொத்த பாக்ஸ் ஆபீஸ் மதிப்பை 2,200 கோடிக்கு மேல் கொண்டு செல்ல முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. பெரிய அளவில் சத்தம் இல்லாமல், திரிஷா இந்த இமாலய வசூல் சாதனையை அமைதியாக நிகழ்த்தியுள்ளார்.

திரிஷாவை பொறுத்தவரை திரைப்படங்களில் நடிப்பது மற்றும் விளம்பரங்களில் தோன்றுவதன் மூலம் அவருக்கு கணிசமான வருமானம் வருகிறது. அவர் 85 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளவராக திகழ்கிறார். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் அவர் சராசரியாக 10 முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார். விளம்பரங்களில் நடிக்க 9 கோடி ரூபாய் வரை அவர் சம்பளமாக பெறுவதாக சொல்லப்படுகிறது.

2000-ஆம் ஆண்டு ஜோடி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் நடிகையாக அறிமுகமான திரிஷா தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நாயகியாக திகழ்கிறார். திரிஷாவுக்கு சொந்தமாக சென்னை, ஹைதராபாத் ஆகிய இரண்டு நகரங்களிலும் 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர குடியிருப்புகள் இருக்கின்றன. பிஎம்டபிள்யூ போன்ற ஆடம்பர கார்களையும் சொந்தமாக வைத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+