கோயம்புத்தூர் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய மாவட்டமாக இருக்கும் வேளையில், இந்நகரத்தை இணைக்கும் பிற நகரங்களும் அதிகப்படியான வாய்ப்புகளைப் பெற்று வருகிறது. இதில் முக்கியமாகக் கரூர் மாவட்டம் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெரும் காரணத்தால் கரூர் - கோயம்புத்தூர் மத்தியில் போக்குவரத்து பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையே பெரும் பகுதி இருவழிச் சாலையாக இருக்கும் காரணத்தால் வேகமாகப் பயணிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இரு மாவட்டங்கள் மத்தியில் பயணிகள் போக்குவரத்து மட்டும் அல்லாமல் டெக்ஸ்டைல் பொருட்கள் சார்ந்த சரக்கு போக்குவரத்தும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் வேகமான போக்குவரத்து மிகவும் அவசியமானதாக உள்ளது.

அந்த வகையில் கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையேயான பசுமை வழிச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) ஆலோசகரை நியமித்துள்ளது.
கரூர் மற்றும் கோயம்புத்தூர் வழித்தடத்தில் வாகனங்களின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாகப் பெருகிவரும் போக்குவரத்து இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, கரூர்-கோயம்புத்தூர் இடையே புதிய சாலை அமைப்பதற்கான திட்டத்தை NHAI சில ஆண்டுகளுக்கு முன்பு முன்வைத்தது.
NHAI அதிகாரிகள், போக்குவரத்தின் அளவை அளவிடுவதற்கும் புதிய சாலையின் சீரமைப்பைக் கண்டறிவதற்கும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர். எவ்வாறாயினும், இந்தத் திட்டம் NHAI கூட்டங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தாலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை.
ஆனால் தற்போது கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையிலான சாலை திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கான ஆயத்த பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், DPR தயாரிக்க ஆலோசகரை NHAI நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த ஆலோசகர் கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையேயான பல்வேறு பகுதிகளுக்குப் பலமுறை சென்று டிபிஆர் பணியை முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. NHAI மூத்த அதிகாரி கூறுகையில், டிபிஆர் தயாரிக்கும் பணி முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது, ஆலோசகர் ஒரு மாதத்திற்குள் அதை சமர்ப்பிக்கலாம். இதன் பின்னர் இந்த அறிக்கை NHAI தலைமையகத்திற்கு அனுப்பப்படும் என ஹிந்து பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
கரூர் டூ கோயம்புத்தூர் வழித்தடத்தில் தேவைப்படும் இடங்களில் சர்வீஸ் சாலைகள் கொண்ட ஆறு வழி நெடுஞ்சாலையாக இது இருக்கும் என்றும், நெடுஞ்சாலையின் பாதை வடிவமைக்கப்பட்டு உள்ளது. கரூர் மற்றும் கோவை இடையே தற்போதுள்ள நெடுஞ்சாலை பாதையில் ஐந்து கி.மீ. அளவில் சிறிய மாற்றம் இருக்கும், ஆனால் இது பெரிய மாற்றங்களாக இருக்காது எனவும் கூறப்படுகிறது.
இந்த 6 வழி சாலை திட்டத்திற்குத் தேவையான நிலம் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், இதற்கு 900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டம் NHAI ஒப்புதல் கிடைத்ததும் நிலம் கையகப்படுத்தும் செயல்முறை தொடங்கும். மே 2024 க்குப் பிறகு இத்திட்டத்திற்கான இறுதி ஒப்புதல் மற்றும் மதிப்பீடுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்: 3 வருடத்தில் டபுள் மடங்கு வளர்ச்சி.. இந்த ஏரியா பக்கமே போக முடியாது போலியே..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications