கரூரில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்து 80 கோடி சாம்ராஜ்ஜியம் உருவாக்கிய தந்தை - மகன்.. வாவ்..!!

தொழிலில் வெற்றி பெறுவது என்பது மிகப் பெரிய காரியமாகும், அதிலும் முதல் தலைமுறை தொழிலதிபர்கள் சாதிப்பது மிகப் பெரிய விஷயமாகும்.
அப்படி தமிழ்நாட்டை சேர்ந்த செந்தில் சங்கர் தனது தந்தையின் பிசினஸை 3ஆம் நிலை நகரில் சிறப்பாக நடத்தி இன்றைக்கு வருடத்துக்கு 80 கோடி ரூபாய் டர்ன்ஓவர் செய்துள்ளது மிகப் பெரிய சாதனையாகும்.

செந்தில் சங்கரின் தந்தை கே.சங்கர் புதிய புதிய பிஸ்னசிலும், தொழில்களிலும் ஈடுப்படுவது வழக்கமாக கொண்டுள்ளார். 1992இல் நைலான் மறுசுழற்சி பிசினஸ்ஸை சங்கர் தொடங்கினார். பின்னர் அதை நிறுத்திவிட்டு துபாய் சென்று அங்கு சாலிட் சர்பேஸ் என்ற செயற்கை மார்பிள் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார்.

கரூரில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்து 80 கோடி சாம்ராஜ்ஜியம் உருவாக்கிய தந்தை - மகன்..  வாவ்..!!

2008இல் சங்கர் ஸ்ரீ ரெங்கா பாலிமர்ஸ் என்ற நிறுவனத்தை கரூரில் தொடங்கி, அதில் ரூ.23 லட்சம் முதலீடு செய்தார். 2011இல் அந்த கம்பெனியில் செந்தில்குமார் சேர்ந்தார். ஆனால் இது அவரது தந்தை சங்கருக்கு பிடிக்கவில்லை. வெளிநாடுகளில் ஏதாவது வேலை பார்க்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் செந்தில்குமாருக்கு இதில் உடன்பாடில்லை.

டிசிஎஸ்ஸில் நல்ல வேலை இருந்தும் சிலிக்கான் வேலியில் நல்ல வாய்ப்புகள் இருந்தபோதும் எனக்கு சுயதொழில் செய்ய வேண்டும் என்பது தான் விருப்பமாக இருந்தது. ஏனென்றால் நல்ல நிறுவனங்களும் தொழிலதிபர்களும்தான் நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றன என்று செந்தில்குமார் கூறினார்.

வேலூரில் உள்ள விஐடி கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பிடெக் படித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் வாழ்க்கையை மையமாக வெளியான குரு என்ற பாலிவுட் படத்தின் மூலம் ஒரு உத்வேகத்தை பெற்றேன். அந்தப் படத்தை இதற்காகவே பல முறை பார்த்தேன் என்கிறார் செந்தில்.

ஸ்ரீ ரெங்கா பாலிமர்ஸ் பெட் பாட்டில்களில் இருந்து பிளாஸ்டிக் கட்டிகளை தயாரிக்கும்போது அதில் செந்தில் வேலைக்கு சேர்ந்தார். நான் எனது வேலையை விட்டுவிட்டு அவருடன் சேரப்போவதாக தந்தையிடம் கூறியபோது வீட்டில் பெரிய விவாதமே ஏற்பட்டது. அவர் எப்போதுமே என்னை கரூர் போன்ற சிறிய நகரில் செட்டில் ஆக விரும்பவில்லை. ஆனால் எனக்கு கரூர் பிடிக்கும். அங்குள்ள மக்களுக்கு எனது உழைப்பும் தொழில்திறனும் பயன்படவேண்டும் என விரும்பினேன் என்றார் செந்தில்.

ஸ்ரீ ரெங்கா பாலிமர்ஸில் அவர் சேர்ந்தபோது 300 டன் பிளாஸ்டிக் கட்டிகளை தயாரித்தது. 2014இல் இது 600 டன் ஆனது. இந்த கட்டிகளை அவர்கள் சீனா, இலங்கை, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். 2014இல் அவர்கள் பிளாஸ்டிக் கட்டியிலிருந்து பாலியெஸ்டர் பைபர்களுக்கு மாறினர். அதுவும் பெட் பாட்டில்களில் இருந்துதான் தயாரிக்கப்பட்டது.

ஒரு வருடத்துக்கு பின்னர் நிறுவனம் கலர் மாஸ்டர் பேட்ச் தொழில்நுட்பத்தை கையில் எடுத்தது. இதன் மூலம் தண்ணீரைப் பயன்படுத்தாமலேயே பல்வேறு நிறத்தில் பைபர்களை டையிங் செய்ய முடியும். இந்த டெக்னிக்கினால் ஜவுளி டையிங்கினால் ஏற்படும் தண்ணீர் மாசுபாடு குறையும்.

தந்தையும் மகனும் சேர்ந்து ஒரு வங்கியில் ரூ.1 கோடி கடன் வாங்கி பழைய கலர் மாஸ்டர் பேட்ச் மெஷின் ஒன்றை வாங்கினர். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் எதிர்பார்த்த வருவாய் அதிலிருந்து வரவில்லை, இதனால் நிதிச் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து செந்திலின் தந்தை சங்கரும், தாய் விஜயலட்சுமியும் மீண்டும் வேலைக்குப் போக நேர்ந்தது. இருவரும் ஐஐடி பட்டதாரிகள்.

எனது பெற்றோர்கள் கல்லூரிக்கு சென்று பாடம் நடத்தி குடும்பத்தை கவனிக்க நேர்ந்தது. அத்துடன் கடனையும் அடைக்கத் தொடங்கினர். இந்த நிலையில் பிசினஸ் எங்களுக்கு சரிபட்டு வராது என்று நினைத்தோம் என்றார் செந்தில்.

ஆனால் நல்ல வேளையாக 2017இல் மார்க்கெட் சீரானது. எங்களது தயாரிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. ஒருவழியாக எங்களது நிலைமை சரியானது. கடனைத் திரும்பச் செலுத்த முடிந்தது என்றார். இதனிடையே அவர்களது நிறுவனம் அடுத்த மாற்றத்தை சந்தித்தது.
பிளாஸ்டிக் பாட்டிலிருந்து கட்டிகள் தயாரிக்கத் தொடங்கி பின்னர் பாலியெஸ்டர் பைபர் தயாரித்து அதன் பின்னர் நூலிழை தயாரிக்கத் தொடங்கினர். இதை வைத்து துணி தயாரிக்க முடிந்தது.

தொடக்கத்தில் இதுபோன்று நிலைப்படுத்தப்பட்ட துணி பிசினஸ்ஸை கரூர் டெக்ஸ்டைல் பார்க்கில் தொடங்கினர். இதில் 250 பெண்கள் பணியாற்றினர். 2018இல் உள்ளூர் மார்க்கெட்டுக்காக டிசர்ட் தயாரித்தனர். பின்னர் பிரபல பிராண்டுகளான ஜாக்கி, வான் ஹூசன் போன்ற கம்பெனிகளுக்கு தயாரித்து தந்தனர். 2020இல் தங்களது தயாரிப்பை இகோலைன் (Ecoline) என்ற பிராண்டில் விற்கத் தொடங்கினர். பல சிரமங்களை சந்தித்தாலும் பின்னர் பிஸினஸ்ஸை கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு விற்கத் தொடங்கினர்.

இந்தியன் ஆயில், செயின் கோபைன், இந்தியா சிமெண்ட்ஸ், டிவிஎஸ், ராம்கோ, பிஎம்டபிள்யூ, ஜோஹோ, இன்போசிஸ் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான டிசர்ட்டுகளை ஆர்டர் செய்தன. இகோலைன் நிறுவனம் தினமும் 15 லட்சம் பெட் பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயாரிப்புகளை உற்பத்தி செய்தது. ஒவ்வொரு இகோலைன் டிசர்ட்டும் 5 கிலோ கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை தடுத்தது.
தங்களது நிறுவனத்தில் இருந்து எந்தவொரு பொருளும் வீணாகாமல் தந்தையும் மகனும் பார்த்துக் கொண்டனர்.

இன்று வரை பல லட்சம் கன அடி தண்ணீரை இகோலைன் சேமித்துள்ளது. அதை வைத்து வீராணம் ஏரியை நிரப்பி விடலாம். இன்று வரை 1,64,250 டன் பெட் பாட்டில்களை அவர்கள் மறுசுழற்சி செய்துள்ளனர். 10,600 டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை தடுத்துள்ளனர். அவர்களது நிறுவனம் இதுவரை நிலக்கரியை பயன்படுத்தியதே இல்லை. சோலார் மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் நிறுவனத்தை நடத்தினர்.

அத்துடன் அவர்கள் புதுமையான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினர். நான்கைந்து ஆண்டுகள் தங்களது தயாரிப்பை பயன்படுத்தி அலுத்துப் போனவர்கள் அந்த டிசர்ட்டை மீணடும் கம்பெனிக்கு அனுப்பினால் அதையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தினர். டிசர்ட்டை தூக்கியெறிந்து விட்டால் அது தானாகவே மக்கிவிடும்.

இகோலைன் தினமும் 30 டன் பைபர்களை பெட் பாட்டில்களில் இருந்து தயாரிக்கிறது. இதிலிருந்து 30 முதல் 40,000 ஆடைகளை மாதந்தோறும் தயாரித்தன. அவர்களது தயாரிப்பு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன. ஸ்ரீ ரெங்கா பாலிமர்ஸ் 85 சதவீத பைபர்களை பயன்படுத்தின. இகோலைன் மீதமுள்ள 15 சதவீத பைபர்களை பயன்படுத்தின.

பைர்களை வைத்து டிசர்ட், ஜாக்கெட்டுகள், டவல், பவுச், சால்வைகள், லாப்டாப் பேக், ஷாப்பிங் பேக்குகளை தயாரித்தனர். இகோலைன் டிசர்ட்டின் குறைந்தபட்ச விலை ரூ.299. அதிகபட்சமாக பிளேசர் ரூ.6500க்கு விற்கப்பட்டது. இகோலைன் ஜாக்கெட்களை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரபலங்கள் வாங்கி அணிந்தனர்.

சென்னையில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டிரேடிலிருந்து ஒரு பேஷன் டிசைனரை வரவழைத்து துணிகளை டிசைன் செய்தனர். இப்போது 450 ஊழியர்கள் இகோலைனில் வேலை பார்க்கின்றனர். இதுதவிர செந்தில் 35 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஓய்வு நேரத்தில் புதிய தொழில்கள் பற்றி கற்று வருகிறார் செந்தில்.

Story written by: Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+