தமிழ்நாடு முழுவதுமே கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தான் அனைவருமே பேசி வருகின்றனர். அந்த அளவிற்கு கரூரிலிருந்து வெளியாகி வரக்கூடிய வீடியோக்களும் புகைப்படங்களும் காண்போரை கண்கலங்க வைக்கின்றன.
பெண்கள், குழந்தைகள் என 35க்கும் அதிகமானவர்கள் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். தமிழக வெற்றி கழக தலைவரான விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று மக்களிடையே பேசி வருகிறார் . அந்த வகையில் நேற்று கரூரில் தவெக கூட்டம் நடைபெற்றது.

வழக்கம்போல நடிகர் விஜய்யை காண்பதற்காக ஏராளமான மக்கள் அங்கே கூடி இருந்தனர் . அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. கூட்டநெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்து துயரம் நேர்ந்துள்ளது. இதுவரை 35க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் பலரும் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்பதுதான் பெரிய சோகம்.
இந்தியாவை பொறுத்தவரை கூட்ட நெரிசல் ஏற்பட்டு சாமானிய மக்கள் உயிரிழப்பது என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. 2025ஆம் ஆண்டில் மட்டும் நாம் பல்வேறு மோசமான கூட்ட நெரிசல்களை சந்தித்து இருக்கிறோம். ஆனால் இத்தனை சம்பவங்களிலும் நாம் எந்த ஒரு பாடத்தையும் கற்கவில்லை என்பது தான் வேதனையே.
மகா கும்பமேளா, பெங்களூருவில் ஆர்சிபி அணியினரின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டம் என 2025 ஆம் ஆண்டு பல்வேறு சோக நிகழ்வுகள் இந்தியாவில் நேர்ந்துள்ளன.
ஜூன் 4,2025: ஐபிஎல் போட்டியில் முதன்முறையாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து பெங்களூருவில் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்ட்டது. சின்னசாமி மைதானத்தில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஒரே சமயத்தில் ஏராளமான மக்கள் திரண்டனர். சின்னசாமி மைதானத்தின் ஒரு நுழைவாயில் வழியாக ஏராளமானவர்கள் முண்டி அடித்து உள்ளே நுழைய முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது .இதில் 11 பேர் உயிரிழந்தனர்.
பிப்ரவரி 15,2025: மகா கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஒரே சமயத்தில் ஏராளமானவர்கள் டெல்லி ரயில் நிலையத்தில் ஒன்று திரண்டனர். அப்போது பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மகா கும்பமேளாவுக்கு செல்வதற்காக ரயிலில் ஏற பலரும் முண்டியடித்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர் .
ஜனவரி 29 ,2025: மகா கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் மௌனி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானவர்கள் புனித நீராட முயற்சி செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்தனர் 60 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜனவரி 8, 2025: திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் ஜனவரி 8ஆம் தேதி அன்று வைகுண்ட துவார தரிசனத்திற்காக டிக்கெட் பெறுவதற்கு ஏராளமானவர்கள் ஒரே இடத்தில் திரண்டனர். பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அது கூட்ட நெரிசலாக மாறியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.
டிசம்பர் 4, 2024: அல்லு அர்ஜுனின் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் வெளியான போது ஹைதராபாத்தில் சந்தியா திரையரங்கில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications