கரூர் வைஸ்யா வங்கி மத்திய வங்கியின் சில விதிமுறைகளை பின்பற்றாததற்காக இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுமார் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளையும் விதிமுறைகளை சரியாக பின்பற்றுகிறதா என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்திய வங்கிகளில் வாராக் கடன் துவங்கி, வங்கி நிர்வாகத்தின் மெத்தனம் வரையில் பல பிரச்சனைகள் இருக்கும் வேளையில் விதிமுறைகளை கடைப்பிடிப்பதை கடுமையாக்கியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி சில வாரங்களுக்கு முன்பு கூட பல கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம், உரிமம் ரத்து என கடுமையாக நடவடிக்கைகளை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கரூர் வைஸ்யா வங்கி-க்கு அபராதம் விதித்துள்ளது.
கரூர் வைஸ்யா வங்கி
தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான வங்கிகளில் ஒன்றாக இருக்கும் கரூர் வைஸ்யா வங்கி, சில விதிமுறைகளை பின்பற்றாததற்காக இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை சுமார் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுள்ளது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியின் அபராதம் விதிக்க காரணம் ஒழுங்குமுறை விதிகளை கடைப்பிடிப்பதில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் மட்டுமே. மேலும் கரூர் வைஸ்யா வங்கி தனது வாடிக்கையாளர்களுடன் செய்துள்ள எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்திற்கும் இந்த அபராதம் தொடர்பு இல்லை என்பதை ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
SSI ஆய்வு
ரிசர்வ் வங்கியின் அறிக்கை படி, பிப்ரவரி 21, 2022 முதல் மார்ச் 04, 2022 வரையிலான காலகட்டத்தில் கரூர் வைஸ்யா வங்கியில் select scope inspection (எஸ்எஸ்ஐ) ஆய்வை ரிசர்வ் வங்கியால் நடத்தப்பட்டது.
30 லட்சம் ரூபாய் அபராதம்
எஸ்எஸ்ஐ அறிக்கை மற்றும் அது தொடர்பான அனைத்து கடிதங்களையும் ஆய்வு செய்ததில், சில கணக்குகளை மோசடிகள் என Joint Lenders' Forum முடிவு செய்த ஒரு வாரத்திற்குள், ரிசர்வ் வங்கியிடம் தெரிவிக்க வங்கி தவறிவிட்டது. இதை உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆர்பிஐ 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் பணம்
கரூர் வைஸ்யா வங்கியில் select scope inspection (எஸ்எஸ்ஐ) ஆய்வு முடிவுகளை முழுமையாக விசாரணை செய்த ஆர்பிஐ, KVB-யிடம் இதற்கான விளக்கம் கேட்ட பின்பு தான் அபராதம் வித்துள்ளது. இந்த அபராதம் மூலம் கரூர் வைஸ்யா வங்கி வாடிக்கையாளர்களின் பணத்திற்கு எவ்விதமான பிரச்சனையும், பாதிப்பும் இல்லை.


Click it and Unblock the Notifications