மும்பை: இந்தியாவின் மிக ஸ்டாக் புரோக்கிங் நிறுவனமான கார்வி ஸ்டாக் புரோக்கிங் விவகாரம், தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளது.
சுமார் 2,௦௦௦ கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடி நடந்ததன் காரணமாக இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA) கடந்த வெள்ளிக்கிழமையன்று, கார்வி ஸ்டாக் ப்ரோகிங்க்கிற்கு இடைகால தடை விதித்துள்ளது.

இதன்படி, வாடிக்கையாளர்களின் பணத்தை வைத்து பங்குகளை வர்த்தகம் செய்யவோ அல்லது புதிய வாடிக்கையாளர்களை இணைக்கவும் கூடாது என செபி, கார்வி ஸ்டாக் புரோக்கிங்கிற்கு கட்டளை இட்டுள்ளது.
இதைத் தவிர, கார்வி பிறரிடமிருந்து அங்கீகாரம் பெற்ற உத்தரவுகளை (Power of Attorney) பங்கு களஞ்சியங்கள் (Depositories : NSDL மற்றும் CDSL), செயல் படுத்தக்கூடாது எனவும் ஆணை பிறப்பித்துள்ளது.
தனது முதல்கட்ட விசாரணைக்குப் பின்னரே தேசிய பங்கு சந்தை பல முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. முதல்கட்ட அறிக்கையில் கார்வி ஸ்டாக் ப்ரோகிங் அதன் வாடிக்கையாளர்களுக்கு உரிமையான 1,096 கோடி ரூபாயை தன் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான கார்வி ரீயால்ட்டிக்கு மாற்றியுள்ளது எனவும் தேசிய பங்கு சந்தை கூறியுள்ளது. இந்த பரிவர்த்தனைகள் எல்லாம் ஏப்ரல் 2016 முதல் அக்டோபர் 2019-க்கும் இடையில் நடந்த மோசடிகள் எனவும் கூறப்படுகிறது.
மேலும் ஜூன் 2019 முதல் பரிவர்த்தனை செய்யாத 291 வாடிக்கையாளர்களின் ரூ.116 கோடிகள் மதிப்புள்ள பங்குகளையும் தன் சொந்த கணக்கிற்கு மாற்றி விட்டது, எனவும் தேசிய பங்கு சந்தை தன் விசாரணையில் கண்டு பிடித்துள்ளது. இதனை தவிர மேலும் பல முறைகேடுகளில் கார்வி ஸ்டாக் புரோக்கிங் ஈடுப்பட்டுள்ளதாக என்.எஸ்.இ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் தேசிய பங்கு சந்தையின் தடயவியல் தணிக்கை அறிக்கைக்கு பின்னரே செபி தனது இறுதி உத்தரவை பிறப்பிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒரு புறம் மோசடி நடைபெற்று பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அதை பங்கு சந்தைகள் ஏன் விரைவில் கண்டறியப்படவில்லை. இதன் விளைவாக மக்கள் தங்களது நம்பிக்கையை தான் இழந்து வருகின்றனர். முன்னரே பி.எம்.சி வங்கியில் நடைபெற்ற மோசடியால் நம்பிக்கையை இழந்துள்ள மக்கள், இந்த விஷயத்தில் மேலும் நம்பிக்கையை இழந்துள்ளனர்.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications