டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஆன்மீக சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையிலான முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
இதன்படி, காசி விஸ்வநாதர் கோயில் மாதிரியைப் பின்பற்றி விஷ்ணுபாத் கோயில் மற்றும் மகாபோதி கோயில் ஆகியவை மேம்படுத்தப்படும் என்றார். சுற்றுலா துறை இந்திய பொருளாதாரத்தில் கணிசமான இடத்தை கொண்டுள்ளது. எனவே சுற்றுலா மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு புதிய திட்டங்களை அறிவிப்பதாக கூறினார்.

சுற்றுலா செல்வது நமது நாகரீகத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது என கூறிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச சுற்றுலா மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இதன் மூலம் பொருளாதார வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார்.
இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்த போவதாக அறிவித்தார். பீகார் மாநிலத்தில் கயாவில் உள்ள விஷ்ணுபாத் கோயில் மற்றும் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயில் ஆகியவை ஆன்மீக சுற்றுலா மையமாக மாற்றப்படும் என தெரிவித்தார்.
காசி விஸ்வநாதர் கோயிலை முன் உதாரணமாக கொண்டு அதனடிப்படையில் இந்த இரண்டு கோயில்களும் மேம்படுத்தப்படும் என்றும் , இந்த இரண்டு கோயில்களும் மத ரீதியான முக்கியத்துவம் கொண்டவை என்றும் கூறினார். உலகத்தரம் வாய்ந்த ஆன்மீக சுற்றுலா மையமாக இவ்விரு தளங்களும் மாற்றப்படும் என உறுதி அளித்தார். பீகார் மாநிலத்தின் ராஜ்கிர் பகுதியிலும் விரிவான மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
நாளந்தா பல்கலைகழகம் மேம்படுத்தப்பட்டு சுற்றுலா மையமாக மாற்றப்படும் என கூறினார். இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை பீகார் மாநிலத்திற்கு சாதகமான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பீகாரில் உள்ள முக்கிய கோயில்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் ராஜ்கிர் சமண கோயில் வளாகத்திற்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்களுக்கு முக்கியமான மத தளமாக ராஜ்கிர் கோயில் விளங்குகிறது. எனவே இதனை மேம்படுத்த தனி கவனம் செலுத்தப்படுகிறது என்றார்.
அதே போல ஒடிசா மாநிலத்திலும் சுற்றுலாவை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கூறினார். ஒடிசாவின் அழகிய தளங்கள், கோயில்கள், பாரம்பரியமிக்க கலை பொருட்கள் ஆகியவை மிகச்சிறந்த சுற்றுலா மையமாக மாறுவதற்கான வாய்ப்பை தருகின்றன, எனவே அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்றார்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications